திருமணம் முடிந்த கையோடு மனைவியுடன் சேர்ந்து செண்டை மேளம் வாசித்து ஆடிய கோபி..!

வெளியிட்டது

பிரபல யூட்யூபர் பரிதாபங்கள் கோபியின் திருமணம் இன்று நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த பிறகு செண்டை மேளம் வாசித்து அவர் மனைவியுடன் நடனமாடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறதுழ பரிதாபங்கள் என்ற சேனலின் உரிமையாளர்களான கோபி மற்றும் சுதாகர் ஆரம்பத்தில் சினிமாவில் ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா என்று வேலை தேடி சென்னைக்கு வந்துள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திருமணம் முடிந்த கையோடு மனைவியுடன் சேர்ந்து செண்டை மேளம் வாசித்து ஆடிய கோபி..! 1

சிவகங்கையை சேர்ந்த இவர்கள் தங்களது கல்லூரி படிப்பை திருச்சியில் முடித்துள்ளனர். சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்த அவர்கள் சினிமாவில் ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா என்று பல சேனல்களை அணுகியிருந்தனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் அங்கு அவர்கள் பயங்கரமாக அசிங்கப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டனர். இருந்தாலும் தங்களது உழைப்பால் என்று பெரிய அளவில் உயர்ந்துள்ளனர்.

விஜய் டிவிக்கு பின்னர் அவர்கள் இருவரும் மூன் டிவியில் சிறிய காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். பின்னர் மெட்ராஸ் சென்ட்ரல் என்னும் ஒரு தனியார் youtube சேனலில் தங்களுடைய காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். இதில் அவர்கள் மிகப் பிரபலமானார்கள். நல்ல கன்டண்டுகளை கொடுத்ததால் குறுகிய காலத்திலேயே அவர்கள் மிகப்பெரிய இடத்தை அடைந்தனர்.

பின்னர் அந்த சேனலில் இருந்து விலகி இருவரும் பரிதாபங்கள் என்ற சொந்தமாக சேனலை நடத்தி வருகின்றனர். இவர்களுடைய யூடியூப் பக்கங்களை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை மட்டும் 12 லட்சம் ஆகும். இவர்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மீம்ஸ்களிலும் இவர்கள் டெம்ப்ளேட் இடம்பெறுவது வழக்கமாக இருக்கிறது.

இந்த நிலையில் கோபிக்கு இன்று திருமணம் நடைபெற்று உள்ளது. சுதாகருக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், கோபிக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. கோபியின் நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடைபெற்றது. அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இன்று அவரது திருமணம் நடைபெற்றுள்ளது. செண்டை மேளங்கள் முழங்க அவர் மேடையில் நடனமாடும் காணொளி தற்போது வைரலாகி உள்ளது. நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..

YouTube video code embed credits: Indiaglitz Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்