தமிழ் சினிமாவில் எப்போதும் புது புது முயற்சிகளுடன் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். கடைசியாக இவர் இயக்கி வெளியிட்ட படம் “ஒத்த செருப்பு” படம் நல்ல சிறந்த விமர்சனங்களை பெற்றது. அடுத்து இவர் அதே போல ஒரு முயற்சியில், “இரவின் நிழல்” படம் எடுத்துள்ளார். அடுத்த சாதனை முயற்சியாக உலகில் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் இரவின் நிழல்.

இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அண்மையில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றநிலையில், உலகம் முழுவதும் ஜூலை 15-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இரவின் நிழல் திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது பெற்ற VFX கலைஞர்களான காட்டலாங்கோ லியோன் மற்றும் கிரேக் மேன் ஆகியோர் இத்திரைலப்படத்தில் பணியாற்றி உள்ளனர். பயாஸ்கோப் பிலிம் ஃபிரேமர்ஸ் தயாரிப்பில், பார்த்திபன் இயக்க, கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார்.
உதயநிதி ஸ்டாலின், பார்த்திபன் இயக்கி நடித்த ‘இரவின் நிழல்’ திரைப்படத்தை பாராட்டி தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில், சாதாரண திரைப்படம் எடுப்பதற்கே அசாதாரண உழைப்பு தேவைப்படுகிறது, அசாதாரணமான இரவின் நிழல் படத்தை எடுக்க பார்த்திபன் சாரால் மட்டுமே முடியும். அவருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் சார் உள்ளிட்ட ‘இரவின் நிழல்’ டீமுக்கும் என் வாழ்த்துக்கள் என கூறியிருந்தார்.
தற்போது அதற்கு நன்றி கூற, பார்த்திபன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “சாதல் சாதாரணம். சாதித்தல் அசாதாரணம். அதற்கான முயற்சியும் உழைப்பும் சதா ரணம். கண்டுணர்ந்து பாராட்டுதல் பெருங்குணம். உயர்த்திப் பிடிக்க உதவுதல் உயர்குணம். இந்நிமிட கடைசி முதல், அடுத்த முதல் வரை அங்கீகாரமே ஆக்ஸிஜன். நன்றி சின்னவரே” என பகிர்ந்துள்ளார்.