ஒரு நிமிஷம் அப்பாவ நினச்சிக்கோ..தைரியம் தானா வரும்..! சாய் பல்லவி நடித்த கார்கி படத்தின் ட்ரைலர் வெளியானது

தமிழின் முண்ணனி நடிகையான சாய்பல்லவி நடித்துள்ள கார்கி படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. சாய் பல்லவியுடன் ஐஸ்வர்யா லெட்சுமி, காளி வெங்கட் போன்றவர்கள் நடித்துள்ளனர். மலையாளத்தில் “பிரமேம்” என்ற படத்தின் மூலம் பல கோடி உள்ளங்களை கொள்ளை கொண்டவர் சாய் பல்லவி. தமிழ் ரசிகர்களை மலையாள படங்கள் பக்கம் திருப்பிய பெருமை அவருக்கு உண்டு. மலர் என்ற டீச்சர் கதாபாத்திரத்தில் முதல் படத்திலேயே அடி தூள் கிளப்பி இருப்பார். படம் வெளியாகி பல வருடங்கள் ஆன போதிலும் இன்றளவும் மலரே பாடல் பலரின் மொபைல் ரிங் டோனாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை. விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சி மூலம் தனது வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் வெளிநாட்டிற்கு சென்று மருத்துவம் படித்தார். ட்ரைலர் வீடியோ கீழே உள்ளது.

ஒரு நிமிஷம் அப்பாவ நினச்சிக்கோ..தைரியம் தானா வரும்..! சாய் பல்லவி நடித்த கார்கி படத்தின் ட்ரைலர் வெளியானது 1

விளம்பரம்

அடிப்படையில் பல் மருத்துவரான இவர், மீண்டும் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். சிறப்பான நடனம், அழகான நடிப்பு, ஓவராக அலட்டிக் கொள்ளாத தன்மை ஆகியவற்றால் இன்று பெரும் உயரத்தில் உள்ளார். தமிழ் படங்களில் சூர்யா, தனுஷ் போன்ற முண்ணனி நடிகர்களுடன் நடித்துவிட்டார். மலையாளம், தெலுங்கில் கலக்கி எடுத்து வருகிறார் சாய்பல்லவி. தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம் என்று கூறும் அளவிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இவர் தற்போது கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மூன்று மொழிகளில் உருவாகியுள்ள கார்கி என்ற படத்தில் நடித்துள்ளார்.

தொடர்புடையவை  "பிகில் படத்தால் போட்ட கேஸ்.....ரசிகருக்கு 7000 ரூபாய் நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு"

ஒரு நிமிஷம் அப்பாவ நினச்சிக்கோ..தைரியம் தானா வரும்..! சாய் பல்லவி நடித்த கார்கி படத்தின் ட்ரைலர் வெளியானது 3

விளம்பரம்

இந்த படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். காலையில் இந்த படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். படம் ஜூலை 15ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. நீங்களும் ட்ரைலரை காண.. Watch the below video

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Sony South

விளம்பரம்

Leave a Comment