நடிகர் ஆதி, யோகி பாபு, ஹன்சிகா ஆகியோர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் பார்ட்னர் திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. காமெடி கலந்த இந்த திரைப்படத்தின் டிரைலரை பார்க்கும் பொழுது இந்த படம் முழுக்க முழுக்க காமெடி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2007 ஆம் ஆண்டு வெளியான மிருகம் என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் நடிகர் ஆதி. கட்டுக்கோப்பான உடலும், எடைக்கு தகுந்த உயரமும் ஆதிக்கு பல ரசிகர்களை உருவாக்கி கொடுத்தது. பின்னாளில் இவர் ஈரம், அரவான், மரகத நாணயம் போன்ற பல நல்ல படங்களில் நடித்திருக்கிறார். தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்திய போதும் இவருக்கு தமிழில் மிகப் பெரிய அளவில் வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. இதனால் இவர் தெலுங்கு பக்கமும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். தற்போது கைவசம் பார்ட்னர். சப்தம் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வித்தியாசமான கதைக்களத்துடன் காமெடி ஜானரை தற்போது கையில் எடுத்திருக்கும் ஆதி பார்ட்னர் என்கிற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் முழுக்க முழுகலக காமெடி திரைப்படமாக இருக்கும் என்பது இந்த படத்தின் ட்ரைலரை பார்த்தாலே தெரிகிறது. இதில் ஹன்சிகா மோத்வானி, யோகி பாபு, பாலக் லால்வாணி, பாண்டியராஜன், ரோபோ சங்கர், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தை மனோஜ் தாமோதரன் இயக்கியிருக்கிறார். சந்தோஷ் தயாநிதி இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மேலும் சபீர் அஹமத் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த படத்தின் டிரைலரை பார்க்கும் பொழுது சயின்டிஸ்ட்டாக இருக்கும் பாண்டியராஜனிடமிருந்து ஃபார்முலா ஒன்றை திருடும் யோகி பாபு ஊசி ஒன்றால் தன்னுடைய உருவத்தில் இருந்து பெண் உருவத்திற்கு மாறுகிறார். குறிப்பாக ஹன்சிகா மோத்வானியாக மாறுகிறார். பின்னர் மீண்டும் யோகி பாபு தன்னுடைய நிஜ உருவத்திற்கு மாறினாரா இல்லையா என்பது தான் படத்தின் மீதிக் கதை.
சுவாரஸ்யமான மற்றும் வித்தியாசமான கதையை எடுத்துக் கொண்டு காமெடியாக இந்த படத்தை இயக்கி இருக்கிறார் மனோஜ் தாமோதரன். இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகளை பிரதீப் மேற்கொண்டிருக்கிறார். தற்போது வெளியாக இருக்கும் இந்த படத்தின் டிரைலர் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. நீங்களும் அந்த ட்ரைலர் வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Sony Music South