காதலரை பிரிந்துவிட்டாரா ஆயிஷா.? ஆயிஷா செய்த அதிர்ச்சி செயல்.! கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்.!

பிக்பாஸ் ஆயிஷா தற்போது தனது காதலரை பிரிந்து விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் கிளம்பி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் செய்த சில விஷயங்கள் அதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. கேரளாவை சேர்ந்தவர் ஆயிஷா ஜீனத். இவர் சென்னையில் உள்ள ஒரு கேட்டரிங் கல்லூரியில் கேட்டரிங் படித்து வந்தார். பின்னர் டிக்டாக் செயலி மூலமாக வீடியோக்களை வெளியிட்டு வந்த அவருக்கு நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பொன்மகள் வந்தாள்” என்கிற சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆயிஷாவும்க்கு அந்த நாடகத்தின் இயக்குனருக்கும் ஏற்பட்ட மோதலால் அவர் அந்த சீரியலில் இருந்து விலகி சன் டிவிக்கு சென்றார். பின்னர் அங்கு மாயா என்கிற சீரியலில் நடித்தார். அதன் பின்னர் ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா என்கிற சீரியலில் நடிகர் விஷ்ணுவுடன் இணைந்த நடித்தார். ஆரம்பம் முதலே விஷ்ணுவும் ஆயிஷாவும் காதலித்து வருவதாக தகவல் கிளம்பியது.

தொடர்புடையவை  காசை திருப்பி கொடுத்து கோபி மூஞ்சியில் கரியை பூசிய ராதிகா.! தரமான ஆப்பு.!

காதலரை பிரிந்துவிட்டாரா ஆயிஷா.? ஆயிஷா செய்த அதிர்ச்சி செயல்.! கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்.! 1

விளம்பரம்

 

ஆனால் இதை நடிகர் விஷ்ணு முற்றிலுமாக மறுத்தார். இந்த நிலையில் ஆயிஷாவிற்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் சீசன் 6-ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். ஜீ தமிழில் இருந்து ஆயிஷாவை கஷ்டப்பட்டு விஜய் டிவிக்கு அழைத்து வந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் அவர் தான் டிக் டாக் செய்து வரும்போது தன்னை ஒருவர் தவறாக பயன்படுத்தினார் என்று முன்னாள் காதலர் தேவை குட்டிக்காத்தும் விதமாக பேசி இருந்தார். இதனால் கடுப்பான முன்னாள் காதலர் தேவ் ஆயிஷா குறித்து பல திடுக்கிடும் தகவல்களை பொது வெளியில் கூறினார். அதில் ஆயிஷாவிற்கு 16 வயதாக இருக்கும் போதே கேரளாவில் முதல் திருமணம் நடைபெற்றதாகவும், பின்னர் 18 வயதில் இரண்டாவது திருமணம் நடைபெற்றதாகவும், அதை விவாகரத்து செய்யாமலேயே மூன்றாவதாக தன்னுடன் காதலில் இருந்து வந்ததாகவும் கூறினார். பின்னர் நான்காவதாகசத்யா சீரியல் விஷ்ணுவுடன் லிவிங் டு கெதரில் இருந்து வந்ததாகவும் தற்போது தனது தங்கையின் காதலர் யோகேஷ் என்பவருடன் வாழ்ந்து வருவதாகவும் பல திடுக்கிடும் தகவல்களை கூறியிருந்தார்.

விளம்பரம்
தொடர்புடையவை  ஜோவிகாவுக்கு வனிதா அனுப்பிய Hint.! T-ஷர்ட்ல் பொறிக்கப்பட்ட வாசகத்தை புரிந்து கொள்வாரா ஜோவிகா.?

காதலரை பிரிந்துவிட்டாரா ஆயிஷா.? ஆயிஷா செய்த அதிர்ச்சி செயல்.! கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்.! 3
ஆனால் இது குறித்து எல்லாம் கண்டுகொள்ளாத ஆயிஷா கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி தனது காதலரை அறிமுகப்படுத்தினார். யோகேஸ்வரன் என்கிற காதலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார். மேலும் தொடர்ந்து காதலனுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்வது, காதலர் தினத்தில் மோதிரம் மாற்றிக் கொள்வது, காதலருக்கு சர்ப்ரைஸ் கொடுப்பது என்று தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த நிலையில் தற்போது ஆயிஷா இன்ஸ்டாகிராமில் தனது காதலருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கி இருக்கிறார், இதை கவனித்த நெட்டிசன்கள் ஆயிஷா தனது காதலரையும் பிரிந்து விட்டாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் காதலருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்கியது குறித்து ஆயிஷா எந்த வித விளக்கமும் அளிக்கவில்லை. விரைவில் அவர் இது குறித்து விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

Leave a Comment