Categories: சினிமா

ஏன்டா இப்படி ஒரு படம் எடுத்து எங்க உயிரை வாங்குறீங்க?? பதான் படத்தை வெளுத்து வாங்கிய ப்ளூ சட்டை.!

வெளியிட்டது

ஷாருக்கான் நடிப்பில் நேற்று வெளியாகி இருந்த படம் தான் பதான். இந்த திரைப்படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தற்போது தனது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். வழக்கம் போல அவர் இந்த படத்திற்கும் காட்டமான விமர்சனங்களையே முன் வைத்திருக்கிறார். சமீப காலமாக பாலிவுட் திரைப்படங்களுக்கு வட இந்தியாவிலேயே அவ்வளவாக வரவேற்பு கிடைக்கவில்லை. ஹிந்தியில் எடுக்கப்பட்டு வெளியாகும் திரைப்படங்கள் அனைத்துமே சறுக்கல்களை சந்தித்து வருகின்றன. குறிப்பாக கொரோனா பெருந் தொற்றுக்குப் பிறகு பாலிவுட்டில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த படங்களும் வெற்றி படங்களாக இல்லை. தென்னிந்திய மொழிகளில் எடுக்கப்பட்டு மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகும் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு கூட ஹிந்தியில் எடுக்கப்படும் பாலிவுட் படங்களுக்கு கிடைப்பதில்லை. குறிப்பாக தென்னிந்திய மொழிகளில் எடுக்கப்பட்டு பல ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்ட காந்தாரா, பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற படங்கள் ஹிந்தியில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கின்றன. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஏன்டா இப்படி ஒரு படம் எடுத்து எங்க உயிரை வாங்குறீங்க?? பதான் படத்தை வெளுத்து வாங்கிய ப்ளூ சட்டை.! 1
இந்த நிலையில் நேற்று வெளியான பதான் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம் கேஜிஎஃப் படத்தின் சாதனையை முறியடித்து வசூலை ஈட்டி வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறது. முன்பதிவிலேயே பல கோடி ரூபாயை அள்ளி புதிய வரலாற்று சாதனை படைத்திருந்தது இந்த திரைப்படம். ஹிந்தியில் மட்டும் 53 கோடியும், தென்னிந்திய மொழிகளில் 2 கோடி வரை பதான் திரைப்படம் முன்பதிவில் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்று படம் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் நிலையில் ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல தனது காட்டமான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். இந்தப் படத்தில் மூளையை வேலை செய்யாமல் பிரஷ்ஷாக வைத்துக் கொண்டு படத்தை எடுத்திருக்கிறார்கள்.

லாஜிக் என்பது சுத்தமாக படத்தில் இல்லை, ஒரு சண்டைக் காட்சியில் ஒரு ட்ரக் மேல் நின்னு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது இரு பக்கங்களில் ஹெலிகாப்டரை கட்டி விடுகிறார்கள். மேலே சண்டை நடக்கிறது கீழே ட்ரக் போய்க்கொண்டிருக்கிறது, பின்னாலேயே ஆட்டுக்குட்டி போல ஹெலிகாப்டர் வந்து கொண்டிருக்கிறது. இதெல்லாம் நம்பும்படியாகவா இருக்கிறது? ஸ்பை த்ரில்லர் எடுக்கிறேன் என்கிற பெயரில் எதையோ எடுத்து வைத்து இருக்கிறார்கள். VFX செய்கிறேன் என்ற பெயரில் ஜான் ஆபிரகாமுக்கு சிக்ஸ் பேக்ஸ் கூட VFX செய்து வைத்து இருக்கிறார்கள். நீ என்ன வேணாலும் பண்ணு, எப்படி வேணாலும் எடு நான் பொழுதுபோக்கிற்காக படம் பார்க்கிறேன் என்கிறவர்கள் மட்டும் இந்த படத்தை சென்று பாருங்கள். மற்றவர்கள் தயவு செய்து இந்த படத்திற்கு போய் விடாதீர்கள் என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார். அந்த வீடியோவை நீங்களும் காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

Youtube Video Code Embed Credits: Tamil Talkies

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்