எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த நடிகர் ஷர்வானந்துக்கு தற்போது திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பல லட்சம் லைக்குகளை குவித்து வருகிறது. ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பில், இயக்குனர் சரவணன் இயக்கிய படம் தான் “எங்கேயும் எப்போதும்” இந்த படம், லாரி ஓட்டும் டிரைவர்கள் செய்யும் அலட்சியத்தால் இரண்டு பேருந்துகள் மோதி எப்படி விபத்துக்குள்ளானது என்றும், அதனால் நடந்த விளைவுகள் குறித்தும் ஒரு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தது இந்த படம்.

படம் வெளியாகி ஒரு மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்திருந்தது. அழகான இரண்டு காதல் கதைகளுடன் ஒரு அழுத்தமான சமூக செய்தியையும் பகிர்ந்து இருந்தது. இந்த படத்தில் நடித்த ஷர்வானந்த் என்பவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இவர் இந்த படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடிகை அனன்யாவிற்கு ஜோடியாக கௌதம் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருந்தது. தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கும் ஷர்வானந்த் தொடர்ந்து தமிழில் இயக்குனர் சேரன் இயக்கிய “ஜே கே என்னும் நண்பனின் வாழ்க்கை” போன்ற சில படங்களில் நடித்தார். கடைசியாக இவர் நடிப்பில் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவான திரைப்படம் தான் “கணம்”. இந்த திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

சினிமா பற்றி எந்த பின் புலமும் இல்லாமல் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி இருந்தார் ஷர்வானந்த். எங்கேயும் எப்போதும் படத்திற்கு பிறகு இவர் பெரிய அளவில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். மேலும் தெலுங்கு படம் ஒன்றை தயாரிக்கவும் செய்திருக்கிறார்.

இந்த நிலையில் அவருக்கு தற்போது ரஷிதா என்பவருடன் நிச்சயம் நடந்திருக்கிறது. 38 வயதாகும் ஷர்வானந்த தற்போது தான் திருமணத்திற்கு தயாராகி இருக்கிறார். தனது வருங்கால மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஷர்வானந்த் இந்த அழகான பெண்ணுடன், தான் புதிய அத்தியாயத்தில் அடி எடுத்து வைக்க இருப்பதாகவும் உங்களின் ஆசிர்வாதம் தேவை என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

ரஷிதா அமெரிக்காவில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதாகவும் அரசியல் பின்புலம் கொண்டவர் என்றும் கூறப்படுகிறது. இந்த புகைப்படங்களுக்கு கீழே காஜல் அகர்வால், அனுபமா பரமேஸ்வரன் போன்ற பிரபலங்கள் ஷர்வானந்துக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.