கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக இருக்கும் தல தோனி தயாரிக்கும் முதல் படத்தின் பட பூஜை இன்று சென்னையில் நடந்தது. இந்த பட பூஜையில் தோனியின் மனைவி சாக்ஷி அகர்வால் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி படத்தை தொடங்கி வைத்தார். ஆரம்பத்தில் டிக்கெட் கலெக்டராக இருந்து தனது வாழ்க்கையை தொடங்கியவர் தோனி. பின்னர் தனது கடின உழைப்பால் இந்திய கிரிக்கெட் அணியில் இணைந்து, பின்னர் அந்த அணிக்கு கேப்டனாக மாறி உலக அரங்கில் இந்தியாவை ஒரு தலைசிறந்த நாடாக மாற்றிக் காட்டிய பெருமை, தோனியையே சேரும். தமிழ் ரசிகர்கள் தல அஜித்திற்கு பிறகு செல்லமாக “தல” என்று அழைக்கக் கூடிய ஒருவராக இருக்கிறார் தோனி. ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடி வரும் அவருக்கு தமிழகத்தில் மட்டும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் இவர் நீளமான முடியுடன் ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பதற்கே ரசிகர்கள் இருக்கிறார்கள். தோனியை அந்த அளவிற்கு ரசிகர்கள் விரும்புகிறார்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது தோனிக்கு படம் இயக்குவதில் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. தோனி என்டர்டெயின்மென்ட் என்கிற ஒரு தயாரிப்பு நிறுவனத்தை அவர் தொடங்கி இருக்கிறார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக அவர் சில படங்களை தயாரிக்க முன் வந்திருக்கிறார். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் முதல் படமே தமிழ் படத்தை அவர் தயாரிக்க உள்ளதாக அறிவித்திருக்கிறார். தற்போது இந்த படத்தின் டைட்டில் மற்றும் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்கிற அறிவிப்பை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. மேலும் இந்த படத்தின் படபூஜை சென்னையில் இன்று நடைபெற்றது. அதற்காக சென்னைக்கு வந்த தோனியின் மனைவி சாக்ஷி குத்து விளக்கு ஏற்றி இந்த படத்தின் படப்பிடிப்புகளை தொடங்கி வைத்திருக்கிறார். ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில், சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற” லவ் டுடே” படத்தின் கதாநாயகி இவானா ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
We're super excited to share, Dhoni Entertainment's first production titled #LGM – #LetsGetMarried!
Title look motion poster out now! @msdhoni @SaakshiSRawat @iamharishkalyan @i__ivana_ @HasijaVikas @Ramesharchi @o_viswajith @PradeepERagav pic.twitter.com/uG43T0dIfl
— Dhoni Entertainment Pvt Ltd (@DhoniLtd) January 27, 2023
இந்தப் படத்திற்கு லெட்ஸ் கெட் மேரீட் (Lets Get Married) என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள். மேலும் இந்த படத்தில் நடிகை நதியா மற்றும் யோகிபாபுவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள். இந்த படத்தை சுருக்கி LGM என்று அழைக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜை வீடியோவை நீங்களும் காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun News