Categories: சினிமா

சிம்புவின் பத்து தல படம் எப்படி இருக்கு.? படம் நல்லா இருக்கா இல்லையா? பொது மக்கள் கூறிய கருத்து.!

வெளியிட்டது

இன்று தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் பத்து தல. தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக இருக்கும் சிம்புவுக்கு இது 47வது படமாக இந்த படம் வெளியாகி இருக்கிறது. தற்போது இந்த படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த பலரும் படம் குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். படம் முடிந்து வெளியே வந்த பலரும் படம் மிக நன்றாக இருப்பதாகவும், படத்தில் நிறைய ட்விஸ்ட்கள் இருப்பதாகவும் கூறி வருகின்றனர். ஏ ஆர் ரகுமானின் இசை மிரட்டி எடுத்துள்ளதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். திரையுலகில் சில ஆண்டுகள் இடைவெளி எடுத்துக் கொள்ள சிம்பு நீண்ட இடைவெளிக்கு பின்னர் மாநகரம் படத்தின் மூலமாக மீண்டும் திரைத்துறைக்கு கம்பேக் கொடுத்து இருந்தார். வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. பின்பு வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார், பத்துதல ஆகிய படங்களை கைவசம் வைத்திருந்தார் சிம்பு. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிம்புவின் பத்து தல படம் எப்படி இருக்கு.? படம் நல்லா இருக்கா இல்லையா? பொது மக்கள் கூறிய கருத்து.! 1

இதில் வெந்து தணிந்தது காடு படத்தில் மட்டுமே சிம்பு நடித்திருந்தார். கொரோனா குமார் படத்தை கைவிட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் நெடுஞ்சாலை, சில்லுனு ஒரு காதல் போன்ற படங்களை இயக்கிய ஒப்பிலி கிருஷ்ணா இயக்கத்தில் பத்துதல படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் சிம்பு. இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், டிஜே அருணாச்சலம், கலையரசன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். ஏஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பென் ஸ்டூடியோஸ் மற்றும் ஸ்டூடியோ க்ரீன் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்திருந்தனர். டிரைலர் பாடல்கள் என அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்போது இன்றைக்கு படம் வெளியாகியிருக்கிறது. படம் குறித்து பேசிய ரசிகர்கள் இடைவேளையின் போது தான் சிம்புவின் என்ட்ரியே இருக்கிறது.


கௌதம் கார்த்திக், சிம்பு ஆகியோர் வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். கிளைமாக்ஸ் காட்சிகளில் கத்தியை வாயில் வைத்து கொண்டு வரும் சிம்பு நடிப்பு பிரமாதமாக இருந்தது. படம் மிகவும் நன்றாக வந்திருப்பதாக பொதுமக்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

Youtube Video Embed Code Credits: TN360

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்