பாவனியின் திருமண வரவேற்பு வீடியோ.! எவ்வளவு சந்தோசமாக வாழ்க்கையை ஆரம்பித்து இருக்காங்க..

வெளியிட்டது

பாவனியின் திருமண வரவேற்பு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. சின்னத்திரையில் நடித்து பிரபலமானவர் நடிகை பாவனி. இவர் முதலில் ஹிந்தி படத்தில்தான் அறிமுகமானார். லாகின் என்ற படத்தில் இவர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். தமிழில் வஜ்ரம் என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் இவருக்கு திரைப்படங்கள் பெரிய அளவில் கை கொடுக்காததால், சின்னத்திரை பக்கம் களமிறங்கினார். முதலில் தெலுங்கு நாடகங்களில் மட்டுமே நடித்து வந்த இவர், பின்னர் தமிழ் பக்கம் தலை காட்டினார். குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் உடன் இணைந்து ரெட்டைவால் குருவி என்ற நாடகத்தில் நடித்தார். அப்போது அவருக்கு அவ்வளவு பெயரும் புகழும் கிடைக்கவில்லை. எனவே மீண்டும் அவர் தெலுங்கு சீரியல் பக்கமே திருப்பினார். ஆனால் சின்னதம்பி சீரியல் மூலமாக மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்தார். இதன் பின்னர் இவருக்கு பல ரசிகர்கள் உருவாக்கினர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

பாவனியின் திருமண வரவேற்பு வீடியோ.! எவ்வளவு சந்தோசமாக வாழ்க்கையை ஆரம்பித்து இருக்காங்க.. 1

இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அவர் பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார். இதில் தினமும் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி வந்தார். இவருக்கும் தாமரைக்கும் ஏழாம் பொருத்தம் ஆகவே இருந்து வந்தது. ஆனாலும் மக்கள் இவரை காப்பாற்றியே வந்தனர். இறுதியில் இவர் மூன்றாவது இடத்தை பிடித்தார். பிக்பாஸில் வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்த அமீர் என்பவர் பாவனியை காதலிப்பதாக கூறினார். ஆனால் பாவனி இன்று வரை அவருக்கு பதில் ஏதும் சொல்லாமலே இருந்து வருகிறார். இருந்தபோதிலும் அவர்கள் இருவரும் டேட்டிங் செல்வது, அவுட்டிங் செல்வது, வெளியே ஒன்றாக செல்வது, டான்ஸ் பிராக்டிஸ் செய்வது என்று ஒன்றாகவே இருந்து வருகின்றனர். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர்களது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஆனால் பாவனிக்கு ஏற்கனவே பிரதீப் என்பவர் உடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. பாவனியுடன் ஏற்பட்ட சிறு பிரச்சனையின் போது பிரதீப் தற்கொலை செய்து இறந்து கொண்டு விட்டதாக, பிக்பாஸில் இருந்தபோதே பாவனி கூறியிருந்தார். ஆனால் அதை எல்லாம் மறந்து விட்டு அமீர், பாவனியை காதலித்து வருகிறார். அவரை இரண்டாவதாக திருமணமும் செய்து கொள்ள நினைக்கிறார். ஆனால் பாவனி கூறும் பொழுது நான் ஒரு ராசி இல்லாத ஆள், என்னிடம் நெருங்கி வருபவர்கள் எப்போதும் விலகி விடுவார்கள் என்றும் அதனால்தான் யோசிப்பதாகவே பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கூறி இருந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்களா? இல்லையா? என்று பேசிக் கொண்டிருக்கும் சூழலில், பாவனியின் திருமண வரவேற்பு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..

YouTube Video Code Embed Credits: Namma Ooru Stars 2.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்