Categories: அரசியல்

குடியரசு தலைவர் பதவியை தவிர்த்த சரத் பவார்!

தனக்கு குடியரசு தலைவர் பதவி வழங்குவதாக பிரதமர் மோடி வாக்குறுதி அளித்ததாகவும், ஆனால் அதனை தான் புறக்கணித்துவிட்டதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் முடிவடைந்து பெரும் பரபரபரப்பு ஓய்ந்து இருக்கிறது. பெரும்பான்மையாக வெற்றி பெற்ற பாஜக-சிவசேனா கூட்டணியின் முதல்வராக பாஜகவின் பட்நாவிஸ் பதவி ஏற்றார். ஆனால் சிவசேனா கூட்டணியை உடைந்து வெளியேறியது.

ஆனால் விட்டுக்கொடுக்காத பாஜக தேசியவாத காங்கிரசின் முத்த தலைவரான அஜித் பவாரை இணைத்துக்கொண்டு மீண்டும் முதல்வராக பட்நாவிஸ் பதவி ஏற்றார். ஆனால் இந்த சூழ்ச்சியை லாவகரமாக முறியடித்த சரத் பவார், காங்கிரஸ் உதவியுடன் உத்தவ் தாக்கரே தலைமையில் ஆட்சியை கைப்பற்றினார். தற்போது சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்ற கையேடு, சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்றார்.

குடியரசு தலைவர் பதவியை தவிர்த்த சரத் பவார்! 1

தற்போது அரசியல் சூழ்நிலை, பழைய நிலைக்கு திரும்பி இருக்கும் வேளையில், நேற்று (2.12.19) மராத்திய தொலைக்காட்சிக்கு சரத் பவார் பேட்டி அளித்திருந்தார். அதில், பிரதமர் மோடி தன்னை தொடர்புக்கொண்டு நாம் இருவரும் இணைந்து பணியற்றுவோம். என்று கூறியதாகவும், தனிப்பட்ட முறையில் இருவருக்குமிடையே தனிப்பட்ட உறவு நன்றாக இருக்கிறது. ஆனால் ஒன்றிணைந்து பணியாற்ற முடியாது என சரத் பவார் கூறியதாகவும் தெரிவித்தார்.

அதே வேளையில், சரத் பவரின் மகளும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுபிரியாவிற்கு மத்திய அமைச்சர் பதவி வழங்குவதாகவும் மோடி கூறியதாக தெரிவித்தார்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்