விஜய் ஆண்டனி நடித்துவரும் பிச்சைக்காரன் 2 படத்தில் இருந்து தற்போது “கோயில் சிலையே” என்கிற பாடல் விளையாட்டு இருக்கிறது அந்தப் பாடலின் வரிகள் இதோ..! வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.!

கோயில் சிலையே..!
என் தாயின் நகலே..!
உன் அண்ணன் இல்லை அம்மா நானே..!
தோகை மயிலே..!
என் வாழ்வின் பொருளே..!
உன் அண்ணன் இல்லை அம்மா நானே..!
உயிரே போகும் நொடியும் அன்பை தருவேன் நான்தானே..!
உலகே மயிராய் தெரியும் உந்தன் மடியில் பொன்மானே..!
கோயில் சிலையே..!
என் தாயின் நகலே..!
உன் அண்ணன் இல்லை அம்மா நானே..!
தெருவிலே வாழ்க்கை வாழ்ந்தாலும், உன்னை தேரில் வைப்பேன் கண்ணே..!
கடவுளே வந்து சொன்னாலும் உன்னை பிரிய மாட்டேனே பெண்ணே..!
மூச்சு நின்று போனாலும் ஆவியாகி நான் வருவேன்..!
உலகின் மொத்த அன்பெல்லாம் உனக்கு காட்டுவேன்..!
இனியோர் பிறவி எடுத்தால் உனக்குத் தாயாய் மாறுவேன்..!
அழுதிடும் உன்னை நான் கண்டால் எனக்குள் தாய்ப்பாலே சுரக்கும்..!
என் விரலினை பிடித்து நீ வந்தால் சொர்க்கம் மண்மீது திறக்கும்..!
வேண்டுமென்று நீ கேட்டால் உயிரை நீட்டுவேன்..! உன்னை
பூமி உடைந்து போனாலும் கையில் தாங்குவேன்..!
இனியோர் பிறவி எடுத்தால் உனக்கு தாயாய் மாறுவேன்..!
கோயில் சிலையே..!
என் தாயின் நகலே..!
உன் அண்ணன் இல்லை அம்மா நானே..! முழு வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video.!
Youtube Video Embed Code Credits: Saregama Tamil