புறா, லவ் பர்ட்ஸ் எச்சங்களால் நுரையீரல் செயலிழக்கும்..எச்சத்தை சுவாசித்தால் வரும் அபாயம்..எச்சரிக்கும் மருத்துவர்கள்..

வெளியிட்டது

இரண்டு நாட்களுக்கு முன்பு மீனாவின் கணவர் காலமானர். அவர் இறப்பிற்கு காரணமாக சொல்லப்பட்டது அவரது நுழையீரல் செயலிழந்து போனது தான். அதற்கு முக்கிய காரணமாக பெங்களூருவில் அவர் வசித்த வீட்டின் அருகே புறாக்கள் அதிகம் இருந்துள்ளது. புறாக்களின் எச்சம் கலந்தை காற்றை அவர் தொடர்ந்து சுவாசித்த காரணத்தால்தான் அவரின் நுரையீரல் செயலிழந்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புறா, லவ் பர்ட்ஸ் எச்சங்களால் நுரையீரல் செயலிழக்கும்..எச்சத்தை சுவாசித்தால் வரும் அபாயம்..எச்சரிக்கும் மருத்துவர்கள்.. 1

டிசம்பர் மாதம் முதலே இதனால் ஆக்ஸிஜன் கருவியின் உதவியுடன் சுவாசித்து வந்த அவருக்கு பிப்ரவரியில் கொரோனா தொற்று ஏற்படவே திலைமை இன்னும் மோசமானது. இதனால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 95 நாட்களாக எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அவரின் புறா எச்சம் கலந்த காற்றினால் ஏற்படும் நுரையீரல் அழற்சி குறித்து பல கேள்விகள் எழுந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர். புறாக்களின் எச்சம் கலந்த காற்றை தொடர்ந்து சுவாசிப்பவர்களுக்கு நுரையீரல் செயலிழக்கும் அபாயம் உள்ளது என்றும், இது அனைவருக்கும் ஏற்படாது என்றாலும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். குறிப்பாக சுவாசக் கோளாறு, அலர்ஜி, ஆஸ்துமா உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். புறா மட்டுமல்லாது லவ் பேர்ட்ஸ் எச்சத்தாலும் நுரையீரல் அழற்சி ஏற்படும் என்று எச்சரித்துள்ளனர். இது மட்டுமில்லாமல் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகள் உதிர்க்கும் ரோமங்கள் காற்றில் கலந்து அதை நாம் சுவாசிக்கும் போது நுரையீரலுக்குள் சென்று அழற்சியை ஏற்படுத்துவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

 

இந்த பிரச்சினையை மூச்சுத் திணறல் வரும்போது தான் கண்டுபிடிக்க முடிவதால் நுரையீரல் செயலிழப்பை தடுக்க முடிவதில்லை. அப்படியே செயலிழந்து போனாலும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். நுரையீல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு எந்த வித தடையும் இல்லை, வயது வித்தியாசமின்றி நுரையீரலை தானமாக பெறலாம் ஆனால் அதில் உள்ள சிக்கல் இரத்த வகை பொருந்தி போக வேண்டும். சரியான இரத்த வகை கிடைக்காவிட்டால் மாற்று அறுவை சிகிச்சை பெற முடியாது. மீனா கணவர் சாகர் உயிரிழந்தர்க்கும் சரியான ரத்த வகை பொருந்து உறுப்புகள் கிடைக்காததே
முக்கிய காரணம். எனவே சுவாசக் கோளாறு இருப்பவர்கள் இது போன்ற செல்லபிராணிகள் வளர்ப்பில் முன்னெச்செரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இதிலிருந்து இரண்டு விஷயங்களை நாம் கற்றுக் கொள்ள வேண்டும் செல்லப்பிராணிகள் வளர்ப்பிலும் கவனம் வேண்டும் அதே போல உடல்தானம் செய்யவும் நிறைய பேர் முன்வர வேண்டும். இதன் மூலம் நாம் இறந்த பிறகு நம் உடலில் இருக்கும் நல்ல பாகங்கள் இது போல பலருக்கு உதவலாம் அல்லவா? நீங்களும் அந்த செய்தியை காண..Watch the below Video..

Youtube Video Code Embed Credits: Polimer News

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்