நடிகர் சீயான் நடித்து வரும் தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோவை தற்போது படக் குழு வெளியிட்டு இருக்கிறது விக்ரமின் 57-வது பிறந்த நாளான இன்று சர்ப்ரைஸ் கொடுக்க இருப்பதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது மேக்கிங் வீடியோவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கின்றனர். இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான பார்வையாளர்களைப் பெற்று youtube டிரெண்டிங்கிலும் இந்த வீடியோ இடம்பெற்று இருக்கிறது. தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் நடிகர் சியான் விக்ரம். இவர் 1990களில் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். ஆனால் இவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு படம் என்று சொன்னால் அது சேது தான். இயக்குனர் பாலா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சீயான் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் விக்ரம். அதன் பின்னர் இவருக்கு முழு நேரமாக சீயான் என்ற பெயரே வந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த அளவிற்கு ஒரு கதாபாத்திரத்தோடு ஒன்றி வாழக்கூடிய ஒரு நடிகராக இருக்கிறார். ஹாலிவுட் சில நடிகர்கள் படத்திற்கு தேவை என்றால் உடலை இளைப்பதும் படத்திற்கு தேவை இல்லை என்றால் உடலை ஏற்றுவதும் என்று அசால்ட்டாக உடலை மாற்றம் செய்து விடுவார்கள். அதுபோல விக்ரமும் கதைக்கு ஏற்றவாறு தன் உடலை வருத்திக் நடிப்பதில் முதலிடம் பிடித்தவராக இருக்கிறார். தற்போது விக்ரம் தங்கலான் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நீலம் பிரொடக்ஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரின்ஸ் நிறுவனம் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன. இந்தப் படத்தை இயக்குனர் பா ரஞ்சித் இயக்க, ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் மேக்கிங் வீடியோ இன்று வெளியாகி இருக்கிறது. சியான் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக இந்த வீடியோ வெளியாகி இருக்கிறது.

வெளியான சில நிமிடங்களிலேயே பல லட்சம் பார்வையாளர்களை தாண்டி இருக்கிறது இந்த வீடியோ. வீடியோவை பார்க்கும் பொழுது மலைவாழ் கிராமத்தில் பழங்குடியினர் போல விக்ரம் நடித்திருக்கிறார். கொளுத்தும் வெயிலில் வேர்வை சிந்த விக்ரமும் படக்குழுவினரும் உழைக்கும் காட்சிகளை காட்சிப்படுத்தி இருக்கின்றனர். கே ஜி எஃப் ஐ மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருவதாக ஏற்கனவே பா.ரஞ்சித் அறிவித்திருந்தார். இந்த படம் ரிலீஸ் ஆனால் உலக அளவில் பேசப்படும் என்று தயாரிப்பாளர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். 57 வயதில் மிகவும் ரிஸ்க் எடுத்து சீயான் இந்த படத்தில் நடித்து வருவதை பார்த்து பலரும் ஆச்சரியத்தில் உறைந்து போயிருக்கின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Junglee Music Tamil