என் புருஷன் உயிரை காப்பாத்தணும், என் பங்கை கொடுத்துடுங்க.! கதறி அழும் விக்னேஷ் சிவனின் சித்தி.!

வெளியிட்டது

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் தங்களது பூர்வீக சொத்தை பறித்துக் கொண்டதாக தற்போது விக்னேஷ் சிவனின் சித்தப்பா கண்ணீர் மல்க பேட்டியளித்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரை சுற்றி எப்பொழுதும் சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. நயன்தாராவின் திருமணத்தில் தொடங்கி அவர்களின் இரட்டைக் குழந்தைகள் பிறந்தது வரை சர்ச்சைகள் தொடர்ந்து வருவது வாடிக்கையாக இருக்கிறது. இந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா மீது விக்னேஷ் சிவனின் குடும்பத்தினர் புகார் ஒன்றை அளித்திருக்கின்றனர். விக்னேஷ் சிவனின் தந்தை சிவக்கொழுந்து திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்தவர். அவருடன் பிறந்தவர்கள் மொத்தம் ஒன்பது பேர். இந்த நிலையில் இந்த 9 பேருக்கும் தெரியாமல் பூர்வீக சொத்தை விக்னேஷ் சிவனின் தந்தை விற்று விட்டதாக கூறப்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

என் புருஷன் உயிரை காப்பாத்தணும், என் பங்கை கொடுத்துடுங்க.! கதறி அழும் விக்னேஷ் சிவனின் சித்தி.! 1

பூர்வீக சொத்தில் அனைவருக்கும் பங்கு இருப்பதால் அனைவருக்கும் சமமான பங்கை பிரித்து கொடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருந்த போதிலும் இதில் எந்த முடிவும் எட்டப்படாததால் விக்னேஷ் சிவனின் சித்தப்பா, பெரியப்பா என அனைவரும் இன்று லால்குடி காவல் நிலையத்தை அனுகியிருக்கின்றனர். அதில் தங்களுக்கே தெரியாமல் தங்களது பூர்வீக சொத்துக்களை சிவக்கொழுந்து ஏமாற்றி விட்டுள்ளதாகவும், மோசடியாக பொது சொத்தை விற்று விட்டதாக சிவக்கொழுந்து, மனைவி மீனாகுமாரி, மகன் விக்னேஷ் சிவன், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் சகோதரி ஐஸ்வர்யா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே விக்னேஷ் சிவனின் சித்தப்பா குஞ்சிதபாதம் என்பவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. நிலத்தின் மீதான தங்களுடைய பங்கு வந்தால் மட்டுமே தங்களால் அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று விக்னேஷ் சிவனின் சித்தப்பா குஞ்சிதபாதத்தின் மனைவி சரோஜா கண்ணீர் மல்க தெரிவித்திருக்கிறார்.


தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றியத்திற்கு பேட்டி அளித்திருக்கும் விக்னேஷ் சிவனின் சித்தப்பா மற்றும் சித்தி இருவரும் தங்களுடைய பூர்வீக சொத்தை தங்களுக்கே தெரியாமல் விக்னேஷ் சிவனின் அப்பா சிவக்கொழுந்து விற்று விட்டதாகவும் தங்களுடைய பங்கு வந்தால் தான் தங்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியும் என்றும் தற்போது கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர். அந்த முழு செய்தியை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Thanthi TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்