ஏகே 61 படத்தின் பெயர் என்னனு தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்.! பேரு சும்மா கிளாஸ் ஆ இருக்கு

தல அஜித் குமார் நடித்து வரும் ஏகே61 படத்தின் தலைப்பு குறித்து தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க, இயக்குனர் எச் வினோத் இயக்கியிருந்தார். பைக் ரேஸ் மற்றும் ஸ்டண்ட் காட்சிகளை கொண்ட இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மிகவும் எதிர்பார்ப்பில் வந்த இந்த படம் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தையே கொடுத்தது. எனவே அடுத்த படத்தை மிக கவனத்துடன் கதையை தேர்ந்தெடுத்து அஜித்குமார் நடித்து வருகிறார். ஏகே 61 படத்தையும் எச் வினோத்தே இயக்க, போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் அஜீத் வெகு நாட்களுக்குப் பிறகு இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஏகே 61 படத்தின் பெயர் என்னனு தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்.! பேரு சும்மா கிளாஸ் ஆ இருக்கு 1

விளம்பரம்

இந்தப் படத்திற்காக தல இரண்டு விதமான கெட்டப்புகளில் வலம் வருகிறார் அஜீத். கதாநாயகனாகவும் வில்லனாகவும் இரண்டு வேடங்களை ஏற்றுள்ளதாக தெரிகிறது. மேலும் வங்கிக் கொள்ளையை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் சூட்டிங்க்கு அவ்வப்போது சென்று வருகிறார் அஜித் குமார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அஜீத் குமார் ஆல் இந்தியா பைக் ரைட் சென்று இருந்தார். அவருடன் மஞ்சு வாரியரும் சென்று இருந்தார். அந்தப் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தன. லடாக்கில் பயணம் மேற்கொண்ட அஜித்குமார் அங்கு இருக்கும் கோவில்களுக்கும் அடிக்கடி சென்று வந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வந்தது.

தொடர்புடையவை  கமலை மிரட்டிய உதயநிதி? உதயநிதிக்கு கமல் கொடுத்த அதிரடி பதில் | Vikram Movie

ஏகே 61 படத்தின் பெயர் என்னனு தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்.! பேரு சும்மா கிளாஸ் ஆ இருக்கு 3

விளம்பரம்

தற்போது ஏகே 61 படத்தின் சண்டைக் காட்சிகளை எடுப்பதற்காக ஏகே 61 படக்குழு தாய்லாந்துக்கு விரைவில் செல்ல இருப்பதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் படத்திற்கு “துணிவே துணை” என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் அக்டோபர் இரண்டாம் தேதி வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. வீரம், விவேகம், விசுவாசம், வலிமை, வரிசையில் அடுத்து துணிவே துணை தலைப்பும் தீயாக இருக்கிறது.

விளம்பரம்

Leave a Comment