வெந்து தணிந்தது காடு படத்தைப் பற்றி மோசமான விமர்சனங்களை கூறிய ப்ளூ சட்டை மாறனை இறங்கி ஏதாவது செய்ய வேண்டும் என்று மிகக் கோபமாக கௌதம் வாசுதேவ் மேனன் பேசியிருக்கிறார். நடிகர் சிம்பு நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான படம் தான் வெந்து தணிந்தது காடு. இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. ஆனால் இந்த படத்தை வழக்கம் போல ப்ளூ சட்டை மாறன் மிக மோசமான வார்த்தைகளில் விமர்சித்திருந்தார். மேலும் அவர் தனிப்பட்ட முறையிலும் பலரை தாக்கி பேசியிருந்தார். கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு வாய்ஸ் ஓவர் பைத்தியம், சிம்புவை பார்த்து வீணா போனவன் டான் ஆன கதை, துணை நடிகர் ஜாஃபரின் உயரத்தை கேலி செய்தும் கடுமையாக விமர்சித்து இருந்தார் ப்ளூ சட்டை. இதற்கு நெட்டிசன்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த வெற்றி விழாவில் கூட நடிகர் சிம்புவும் கௌதமும் விமர்சனம் செய்யுங்கள், ஆனால் உருவ கேலி செய்யாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர். இந்த நிலையில் கவுதம் வாசுதேவ் மேனன் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அந்த பேட்டியில் ப்ளூ சட்டை மாறனுக்கு எதிராக பல கருத்துக்களை பேசினார். இந்தப் படத்திற்காக சிம்பு மிகவும் கஷ்டப்பட்டார். உடல் எடையை குறைப்பதற்காக அவர் மிகவும் கடினமாக உழைத்தார். கடந்த படத்தில் இல்லாத உழைப்பை இந்த படத்தில் சிம்பு கொடுத்தார். உணவை கூட அசைவம் உண்ணாமல் பெரும்பாலும் சைவ உணவுகளையே உண்டு அவர் உடல் குறைப்பிற்காக மிகவும் கஷ்டப்பட்டார். ஆனால் விமர்சனம் சொல்கிறேன் என்ற பெயரில் எங்கேயோ உட்கார்ந்து கொண்டு படத்தை ஒரு நிமிடத்தில் கேலி செய்து பேசுகின்றனர்.

விமர்சனங்களால் சிலர் படத்திற்கு வராமலேயே இருக்கிறார்களோ என்ற எண்ணம் தனக்கு ஏற்படுவதாகவும், வெந்து தணிந்தது காடு படத்திற்கு 80% பாசிட்டிவான விமர்சனங்களை கிடைத்தது, ஆனால் விமர்சனம் பண்ணுகிறேன் என்கிற பெயரில் அடுத்தவர் வாழ்க்கையில் மண்ணை அள்ளிப் போடாதீர்கள். ஏதோ ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு நீங்கள் எதிர்பார்க்கும் கதையை சொல்லாமல் நான் எடுத்த படத்தை எப்படி இருக்கிறது என்பதை மட்டும் விமர்சனமாக சொல்லுங்கள். அதையும் குரலை உயர்த்தாமல் மிகவும் மரியாதையாக விமர்சனம் செய்யுங்கள் என்று கௌதம் பேசினார். ப்ளூ சட்டை மாறன் என்பவரின் பெயரைக் கூட சொல்ல எனக்குப் பிடிக்கவில்லை. அவர் மீது எனக்கு மிகுந்த கோபமாக இருக்கிறது. அவருடைய சேனல் வளர வேண்டும் என்பதற்காக இதுபோல் மோசமான விமர்சனங்களை அவர் கூறுகிறார் என்று பேசினார்.

மேலும் திருச்சிற்றம்பலம் படத்தை கூட அவர் முதலில் நன்றாக இல்லை என்பது போல் கூறிவிட்டு நடுவில் நன்றாக இருப்பதாக கூறினார். இவர் போன்ற விமர்சனம் செய்பவர்களை இறங்கி ஏதாவது செய்யலாம் என்று எனக்கு தோன்றுகிறது. கிளாசாக இருக்கும் இயக்குனர்கள் என நினைக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை ஆனால் உண்மையிலேயே எனக்கு இறங்கி ஏதாவது செய்ய வேண்டும் போல இருப்பதாக கௌதம் வாசுதேவ் கோபமாக பேசினார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..
YouTube Video Code Embed Credits: Thanthi Tv