தை மாதமிது. தமிழர் கொண்டாட்டங்களில் மிக முக்கியமான மாதமாக தை மாதம் இருந்து வருகிறது. பொங்கல் தினத்தை தமிழர் புத்தாண்டு என ஒருசாரரும், தமிழர் திருநாள் என மற்றோரு சாராரும் கொண்டாடி வருகிறார்கள்.

மருத நிலம் என்று அழைக்கப்படும் வயல் மற்றும் வயல் சார்ந்த பகுதிகளில் பொதுவாக இந்நேரம் வேளாண் அறுவடை முடிந்திருக்கும். எனவே வேளாணுக்கு முக்கிய உதவியாக இருக்கும் சூரியன், நிலம், மாடுகள் போன்றவற்றிக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு பொங்கல் கொண்டாடப்படுவது வழக்கம்.
தென்னிந்திய நாடுகள் மட்டுமின்றி டெல்லி மற்றும் ஹரியானாவில் ’சங்க்ராத்’ அல்லது ’சங்கராந்தி’ என்கிற பெயரில் கொண்டாடுகின்றனர். அதேபோல், பஞ்சாப் மாநிலத்தில் ’மாகி’ என்கிற பெயரில் தங்கள் அறுவடை நாளை விமர்சையாகக் கொண்டாடுகின்றது.
ராஜஸ்தான் மற்றும் மேற்கு மத்திய பிரதேச மாநிலங்களில் ‘மகார் சங்ராத’ என்ற பெயரிலும், அசாமில் ’மாக் பிஹு’ அல்லது ’பொகாலி பிஹு’; மகாராஷ்டிராவில் ’மகார் சங்ராதி’ ; கோவாவில் ’ஹல்தி கும்கும்’; குஜராத்தில் ’உத்ராயன்’; ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் ’மஹா சாஜி’; உத்தர பிரதேச மாநிலத்தில் ’கிச்செரி’; ஒடிசாவில் ’மகர சாலா’; பிஹார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் ’சக்ராத்’ அல்லது ’கிச்டி’; கர்நாடக மாநிலத்தில் ’சுகி’; போன்று பல்வேறு மாநிலங்களில் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.
இவ்வாறு அனைத்து மாநிலங்களிலும் பொதுவாக விவசாயத்தை முதற்கொண்டே பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் பொங்கல் விழா இந்து தர்மத்திற்கு உரியது என ஒருசாரார் தற்போது பேசி வருகிறார்கள்.
ஆனால் இந்து மத சாஸ்திரத்திற்குள் ஒரு போதும் பொங்கல் இருந்ததில்லை. முக்கியமாக வேளாண் என்பதே இந்து மத தர்மப்படி ‘தீட்டு’ தொழிலாகும்! பொங்கலை இந்துமய படுத்தும் பொருட்டு மற்ற மதத்தினரை விலக்கி வைத்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள்.
இதற்கெல்லாம் ஒரே பதில் தான் இருக்கிறது. பொங்கல் என்பது மருத நிலத்தின் ஒரு விழா மட்டும் தான். அது ஒட்டுமொத்த தமிழர்களின் விழாவே கிடையாது. எனவே இத்தகைய மத புரட்டுகளை புறம் தள்ளி அனைவருமாய் ஒன்றுமையாய் பொங்கல் தினத்தை கொண்ண்டாடுவோம்!