Categories: சினிமா

பொன்னியின் செல்வன் பாகம் 2ன் முக்கிய காட்சியை வெளியிட்டது படக்குழு.! இதோ ஸ்னீக் பீக் வீடியோ.!

வெளியிட்டது

பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து தற்போது முக்கிய காட்சி ஒன்றை படக்குழுவினர் சிறிய ப்ரோமோ போல வெளியிட்டு இருக்கின்றனர். படம் வெளியாக இன்னும் இரண்டு தினங்கள் இருக்கும் நிலையில், ஒன்றன்பின் ஒன்றாக அப்டேட்கள் வெளியாகி வருகிறது. பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் படமாக இயக்கி சாதித்து காட்டியிருக்கிறார். இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்திக் என பல நடிகர்கள் நடிப்பில் இந்த படம் பிரம்மாண்டமான முறையில் படமாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியான நிலையில், ஆறு மாதங்களுக்குப் பிறகு வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது. முதல் பாகத்தின் கிளைமாக்ஸில் அருள்மொழி வர்மனும், வந்திய தேவனும் நடுக்கடலில் நின்று எதிரிகளுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்போது கப்பலில் மின்னல் தாக்கி தீப்பிடித்து எறிந்து இரண்டாக உடைந்து கடலுக்குள் மூழ்குகிறது. அருள்மொழி வர்மனும், வந்திய தேவனும் கடலுக்குள் மூழ்குகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் பாகம் 2ன் முக்கிய காட்சியை வெளியிட்டது படக்குழு.! இதோ ஸ்னீக் பீக் வீடியோ.! 1

அப்போது கடலுக்குள் குதிக்கும் ஊமை ராணி அருள்மொழி வர்மரையும் வந்திய தேவனையும் காப்பாற்றினாரா என்பது தெரியவில்லை? மேலும் ஊமை ராணி பார்ப்பதற்கு அப்படியே தஞ்சாவூரில் இருக்கும் நந்தினியின் உருவத்தை போலவே இருப்பது அதிசயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த ஊமை ராணி யார்? அவருக்கும் அருள்மொழிவர்மனுக்கும் என்ன தொடர்பு? அவர் ஏன் நந்தினியைப் போலவே இருக்கிறார்? காஞ்சியிலிருந்து கடம்பூர் மாளிகைக்கு கிளம்பி வரும் ஆதித்த கரிகாலனை நந்தினி தனது வாளால் கொலை செய்தாரா? என்பது குறித்த கேள்விகளுக்கெல்லாம் வருகிற 28ஆம் தேதி விடை தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது புதிய வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் பாண்டியர்களின் ஒற்றவர்களாக இருக்கும் சோம்பன் சாம்பவன், ரவி தாசன் ஆகியோரிடம் வந்தியத்தேவன் மாட்டிக் கொள்கிறான். அவனை ஒரு காட்டுக்குள் கட்டி வைத்திருக்கின்றனர். அப்போது அந்த வழியாக சடை முடிவுடன் காலாமுகன் ஒருவன் வருகிறான்.

அவனைப் பார்த்ததும் வந்தியத்தேவன் பீதியில் உறைந்து போய் இருக்கிறான். கையில் கொள்ளிக்கட்டையுடன் நீண்ட சடை முடியும், தாடியுடன் உடம்பில் சாம்பல் பூசிக்கொண்டு காலாமுகன் தோன்றுகிறான். அவனைப் பார்த்தவுடன் ஒரு நிமிடம் திகைத்துப் போன வந்தியத் தேவன், பிறகு அவன் ஆழ்வார்கடியான் நம்பி என்பதை கண்டு கொள்கிறான். பின்னர் எப்படி தம்பி என்னை கண்டுபிடித்தாய் என்று ஆழ்வார்க்கடியான் கேட்க, நீ வருவதற்கு முன்பாக முன் தொப்பை வந்துவிட்டது என்று சொல்கிறான். மேலும் நீ ஆதித்த கரிகாலரை தேடி செல்லும், நான் குந்தவையிடம் சென்று ஒரு முக்கியமான விஷயத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டு புறப்படுகிறான். அந்த முக்கியமான காட்சியை தற்போது படக்குழுவினர் ஸ்னீக் பீக் காட்சிகளாக வெளியிட்டு இருக்கின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: MovieBuff Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்