பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் நாளை மிகப்பிரமாண்டமாக வெளியாக உள்ள நிலையில் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் போஸ்டர்கள் அனைத்தையும் தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. குறிப்பாக பெண்களின் கதாபாத்திரங்களாக வரும் பூங்குழலி வானதி போன்றவர்களின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் பூங்கொடி படகு ஓட்டும் பெண்ணாக வருபவர், வானதி ராஜராஜ சோழனுக்கு காதலியாக வரும் கதாபாத்திரமாகும். மேலும் பிரபு, விக்ரம் பிரபு போன்றவர்களின் கதாபாத்திரங்களின் போஸ்டர்களும் தற்போது வெளியாகி இருக்கிறது. மணிரத்தினம் இயக்கத்தில் லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் தான் பொன்னியின் செல்வன். படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இது 1950 ஆம் காலகட்டத்தில் அமரர் கல்கியால் எழுதப்பட்ட கதை ஆகும். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

இந்தக் கதையை பலரும் படமாக்க முயற்சித்து இறுதியில் தோல்வி அடைந்தனர். ஆனால் இதை படமாக்கி சாதனை புரிந்துள்ளார் மணிரத்தினம். இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்திக், ஜெயம் ரவி, பிரபு, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், திரிஷா, சரத் குமார், பார்த்திபன், ரகுமான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக ஏ ஆர் ரகுமான் குரலில் வெளியான பொன்னி நதி பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருக்கிறது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் மொத்தம் ஐந்து பாகங்களாக வெளிவந்துள்ளது. இதனால் இந்த படத்தை ஒரே பாகமாக எடுக்க முடியாது என்பதால் இரண்டு பாகமாக எடுத்துள்ளனர். முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
எனவே படம் வெளியாக சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் டிரைலரை நேரு உள்விளையாட்டு அரங்கில் வைத்து வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக ரஜினிகாந்த், கமலஹாசன் முதலமைச்சர் மு்க ஸ்டாலின் ஆகியோரை அழைத்து அவர்கள் கையால் ட்ரெய்லர் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை ட்ரெய்லர் வழியாக இருக்கும் நிலையில் படத்தின் அனைத்து கதாபாத்திரங்களின் போஸ்டர்களையும் தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி சுந்தர சோழன், செம்பியன் மாதேவி, மதுராந்தகர், பூங்குழலி, வானதி போன்ற முக்கிய கதாபாத்திரங்களின் போஸ்டர்களை வெளியிட்டுள்ளது. இவர்கள் மட்டுமல்லாமல் பெரிய வேளாளராக நடிகர் பிரபுவும், பார்த்திபேந்திர பல்லவனாக விக்ரம் பிரபுவும், மலையமானாக நடிகர் லாலின் போஸ்டர்களும் வெளியாகியிருக்கின்றன. செய்தியை விரிவாக பார்க்க கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.! Watch the below video..
Youtube Video Code Embed Credits: ponniyinselvan_movie