தயாரிப்பாளர் ரவீந்திரனை கடுமையாக தாக்கி ட்வீட் ஒன்றை போட்டுள்ளார் வனிதா விஜயகுமார். நடிகை வனிதா விஜயகுமார் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. முதலில் இரண்டு திருமணம் செய்த அவர், இரண்டு பேருடனும் வாழ பிடிக்காமல் தனியாக வாழ்ந்து வருகிறார். முதல் கணவர் ஆகாஷுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகன் இருக்கிறார். இவர் வெளிநாட்டில் படித்து வருகிறார். இவர் தன் தாயுடன் பேசுவதே இல்லை. விஜய் ஸ்ரீஹரியை வனிதாவிடம் இருந்து பிரித்து சிறுவயதிலேயே தாத்தா விஜயகுமார் அழைத்து சென்று விட்டார். எனவே இவர் தனது தாத்தா பாதுகாப்பிலும் தனது தந்தை பாதுகாப்பிலும் வளர்ந்து வருகிறார். பின்னர் வனிதாவிற்கு இரண்டாவது முறை திருமணம் ஆகி இரண்டு மகள்கள் உள்ளார்கள். அதில் தற்போது இரண்டாவது மகள் ஜெயனிதா தனது தந்தையுடன் வசித்து வருவதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. எனவே வனிதா தனது மூத்த மகள் ஜோவிகாவுடன் மட்டுமே வசித்து வருகிறார் வனிதா.

வனிதா தனது ஆடை விற்பனை மற்றும் அழகு சாதன விற்பனை கடையை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவருக்கு பீட்டர் பால் என்பவருடன் திருமணம் நடந்தது. அப்போது பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருந்ததால், இந்த திருமணத்தை தயாரிப்பாளர் ரவீந்திரன் கடுமையாக எதிர்த்தார். மேலும் பீட்டர் பாலின் முதல் மனைவிக்கு ஆதரவாகவும் இருந்து வந்தார். இதனால் வனிதாவுக்கும் ரவீந்திரனுக்கும் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டன. ஒரு நாள் லைவில் இருவரும் கடுமையாக மோதிக்கொண்டனர். பின்னர் தொடர்ந்து ட்விட்டரிலும் வார்த்தை போர்கள் நீடித்து வந்தன. இந்த நிலையில் தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கும் சின்ன திரை நடிகை மகாலட்சுமிக்கும் இரண்டாவது திருமணம் நடநதது. மகாலட்சுமிக்கும் ரவீந்தருக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும்.


சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்த ரவீந்தர், வனிதா விவாகரத்து பெறாத ஒருவருடன் திருமணம் செய்திருந்தார். அதனால் தான் அவரை கடுமையாக விமர்சித்து இருந்தேன். எனக்கும் எனது மனைவிக்கும் முறையாக விவாகரத்து ஆகியுள்ளதால், நாங்கள் முறையாகத்தான் திருமணம் செய்து இருக்கிறோம். எனவே இந்த விஷயம் தெரிந்தால் வனிதா எங்களை மனதார வாழ்த்தி இருப்பார் என்று பேட்டி அளித்திருந்தார். ஆனால் தற்போது ட்விட்டரில் ட்வீட் போட்டிருக்கும் வனிதா மறைமுகமாக ரவீந்தரை கடுமையாக சாடி இருக்கிறார். அதில் அவர் மற்றவர்களின் வாழ்க்கையைப் பற்றி கவலைப் பட முடியாத அளவுக்கு மிகவும் மகிழ்ச்சியாக பிஸியாக இருக்கிறேன். கர்மா ஒரு பிட்ச்..மற்றவர்களுக்கு திருப்பி கொடுக்க கர்மாவுக்கு தெரியும், நான் கர்மாவை நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த பலரும் ரவீந்தரனைத் தான் வனிதா கூறுகிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
Youtube Code Embed Credits: We Talkies