விருது வழங்கும் மேடையில் நடந்த சண்டை.! விளக்கம் கொடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்

தமிழ் திரையுலகில் இருக்கும் பெண் இயக்குனர்களில் முக்கியமாக இருப்பவர் லட்சுமி ராமகிருஷ்ணன் இவர் இயக்குனராக அறியப்பட்டதை விட சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலமாகத்தான் அதிகமாக அறியப்பட்டார். இவர் இயக்கிய நான்கு படங்கள் ஆரோகணம் நெருங்கி வா முத்தமிடாதே அம்மணி ஹவுஸ் ஓனர் என்று நான்கு படங்களை இயக்கி இருக்கிறார் தற்போது சமுத்திரக்கனி ஹீரோவாகவும், மிஷ்கினை வில்லனாகவும் வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில், தமிழக அரசு, சிறந்த படங்கள் மற்றும் அதில் நடித்தவர்களுக்கான விருதினை வழங்கும் விழாவை தற்போது நடத்திக் கொண்டிருக்கிறது. இதில் தமிழக அரசின் 2011 ஆம் ஆண்டுக்கான சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருது, ‘உச்சிதனை முகர்ந்தால்’ படத்தில் நடித்த லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விருது வழங்கும் மேடையில் நடந்த சண்டை.! விளக்கம் கொடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன் 1

விளம்பரம்

அந்த விருதை பெறுவதற்காக மாலை ஐந்து மணிக்கு கலைவாணர் அரங்கம் அந்த லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தார். இந்த நிலையில், 2011 ஆம் ஆண்டு விருது பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு விருதுகள் கொடுத்து முடிக்கப்பட்ட நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணனின் பெயர் அழைக்கப்படவில்லை. இதனால் ஆவேசமான அவர் நேரடியாக மேடைக்குச் செல்லும் வழியில் நின்ற செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிகளிடம் தன்னை வரவழைத்து அசிங்கப்படுத்தியது ஏன்? என்று ஆதங்கப்பட்டார். அவரை மேடையில் ஒரு பகுதியில் அமரச் சொல்லி சமாதானப்படுத்தி, அதோடு விடுபட்ட விருதையும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வழங்கி அனுப்பி வைத்தனர்.

தொடர்புடையவை  பேரன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் Vijayakumar..! வெளியான புகைப்படங்கள் இணையத்தில் வைரல்..!

விருது வழங்கும் மேடையில் நடந்த சண்டை.! விளக்கம் கொடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன் 3

விளம்பரம்

இதையடுத்து விழா சிறப்பாக இருந்ததாக மகிழ்ச்சி பொங்க கூறியவாறு அங்கு இருந்து சென்றார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இந்த செய்தியை தனியார் தொலைக்காட்சி செய்தியாக வெளியிட்டு இருந்தது. தற்போது இதற்கு பதில் அளித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள லட்சுமி ராமகிருஷ்ணன் என்னுடைய ரெஸ்பான்ஸ் மிகவும் மிகைப் படுத்தப்பட்டு தனியார் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது என்று பதிவிட்டு இருக்கிறார். மேலும் தனக்கு இந்த விருதை வழங்கிய தமிழக அரசு மற்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் நன்றியையும் அவர் தெரிவித்திருக்கிறார். அந்த செய்தியை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

YouTube video Code Embed Credits: Lakshmy Ramakrishnan

விளம்பரம்

Leave a Comment