நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இயக்குனர் ராம் இயக்கும் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் Glimpse வீடியோ வெளியானது.!

இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் இருந்து தற்போது கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நடிகை அஞ்சலி தற்போது இந்த படத்தின் மூலமாக திரையுலகத்திற்கு ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். இயக்குனர் ராம் தற்போது நிவின்பாலி, அஞ்சலி, சூரி ஆகியோரை வைத்து இயக்கி வரும் திரைப்படம் தான் ‘ஏழு கடல் ஏழு மலை’. இந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்து இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இயக்குனர் ராம் இயக்கும் 'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் Glimpse வீடியோ வெளியானது.! 1
இந்தப் படத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர். நிவின்பாலியுடன் சூரி ரயிலில் சென்று கொண்டிருக்கிறார். அப்போது நிவின் பாலி சூரியிடம் உன் வயது என்ன? என்று கேட்க, சூரி தனக்கு 32 என்று கூறுகிறார். அதற்கு நிவின் பாலி தன் வயது 8822 என்று கூறுகிறார். நான் சொன்னால் நம்ப மாட்டீங்க ஆனால் நான் சொன்னதெல்லாம் நிஜம் என்று அஞ்சலியிடம் நிவின்பாலி கூறுகிறார். இதுபோன்ற வீடியோ ஒன்றை கிளிம்ப்ஸாக படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  "என் மகளுடன் நானும் இறந்துவிட்டேன்" இறந்த மகள் பற்றி உருக்கமாக பதிவிட்ட விஜய் ஆண்டனி

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இயக்குனர் ராம் இயக்கும் 'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் Glimpse வீடியோ வெளியானது.! 3

இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் சென்னை மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து முடிந்திருந்தது. சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி இருந்த நிலையில் தற்போது வித்தியாசமான கதைக்களத்துடன் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits:

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment