“விசித்ரா மேம் உங்கள பொண்ணு மாதிரி தான் பாக்குறாங்க” அர்ச்சனாவுக்கு புரிய வைக்கும் மாயா..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்று 95வது நாளை நிறைவு செய்கிறது. விரைவில் நிறைவு கட்டங்களை எட்ட இருக்கும் இந்த நிகழ்ச்சியில் தற்போது வரை சண்டை நீடித்து வருகிறது. 23 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் எட்டு போட்டியாளர்கள் மீதம் இருப்பதால் எண்ணிக்கையை அதிரடியாக குறைக்கும் பணியில் பிக் பாஸ் ஈடுபட்டுள்ளார். அதற்காக பணப் பெட்டி டாஸ்க்கை அவர் வைத்திருக்கிறார். ஆனால் மூன்று நாட்களாக பணப்பெட்டியை யாரும் எடுப்பதாக தெரியவில்லை. ஒரு லட்சத்தில் ஆரம்பித்து தற்போது 12 லட்சம் வரை இந்த பேரம் உயர்ந்திருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"விசித்ரா மேம் உங்கள பொண்ணு மாதிரி தான் பாக்குறாங்க" அர்ச்சனாவுக்கு புரிய வைக்கும் மாயா..! 1
இந்த நிலையில் இன்று மார்னிங் வைக்கப்பட்டு இருந்த டாஸ்க்கில் யார் வெளியில் ஒரு பி.ஆர் குழுவை வைத்துக்கொண்டு அவர்களுக்காக வேலை செய்கிறார்கள்? என்கிற கேள்வியை பிக் பாஸ் அனுப்பி இருந்தார். அதில் பலரும் அர்ச்சனா தான் வெளியில் பி.ஆர் டீமை வைத்துக் கொண்டு உள்ளே விளையாடிக் கொண்டிருக்கிறார் எனக் கூறினர். இதனால் அர்ச்சனா மிகுந்த கோபத்திற்கு உள்ளானார். குறிப்பாக விசித்ரா பேசியது அர்ச்சனாவிற்கு மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. விசித்ராவிற்கும் அர்ச்சனாவிற்கும் இடையே மிகப்பெரிய வாக்குவாதமே எழுந்தது.

விளம்பரம்
தொடர்புடையவை  நந்தினி கையில் சிக்கிய தர்ஷினியின் கடிதம்.! ரவுடிகளிடம் இருந்து தப்பித்த தர்ஷினி.! ப்ரோமோ இதோ.!

"விசித்ரா மேம் உங்கள பொண்ணு மாதிரி தான் பாக்குறாங்க" அர்ச்சனாவுக்கு புரிய வைக்கும் மாயா..! 3
இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் விசித்ரா பற்றி அர்ச்சனா மாயாவிடம் கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் மாயா வழக்கத்திற்கு மாறாக விசித்ரா பற்றி நல்ல முறையில் அர்ச்சனாவிடம் கூறிக் கொண்டிருக்கிறார். மாயா கூறும் பொழுது, “விசித்ரா உண்மையாலுமே உங்களை மனதார நேசிக்கிறார், உங்களை மகளாக நினைக்கிறார்” என்று மாயா நல்ல விதமாக கூறிக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment