Categories: சினிமா

இந்த படத்தை வடக்கான் பாத்தா, பான்பராக் வாயில காறி துப்புவான்.. பொன்னியின் செல்வன் பற்றி கடுமையாக விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்

வெளியிட்டது

பொன்னியின் செல்வன் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது கடுமையான விமர்சனங்களை வைத்திருக்கிறார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நேற்று வெளியான படம் தான் பொன்னியின் செல்வன். சோழர்களின் பெருமையை சொல்லும் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பலரும் படம் மிக நன்றாக இருக்குதாக கூறினார். மேலும் இந்த நாவலை படித்த பலரும் நாவலில் உள்ளது போலவே மணிரத்னம  படத்தை எடுத்து இருக்கிறார் என்று கூறினர். வேறு சிலர் நாவல்படித்த தங்களுக்கு ஏமாற்றமாக இருந்ததாக கூறினர். இதேபோல ப்ளூ சட்டை மாறனும் படம் குறித்த தனது பல விமர்சனங்களை வைத்துள்ளார்.  அதில் அவர் குறிப்பாக இந்த படத்தை வட இந்தியர்களிடம் காட்டினால் அவன் பான் பராக் போட்ட வாயினாலே காறி துப்பி விடுவான் என்று கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்தை வடக்கான் பாத்தா, பான்பராக் வாயில காறி துப்புவான்.. பொன்னியின் செல்வன் பற்றி கடுமையாக விமர்சித்த ப்ளூ சட்டை மாறன் 1

ஆரம்பத்தில் படம் நன்றாக இருப்பதாக விமர்சனம் சொல்ல தொடங்கிய ப்ளூ சட்டை மாறன் பின்னர் இது படத்திற்கு முட்டுக் கொடுக்கும் பாய்ஸ்க்காக சொன்னேன். உண்மையான விமர்சனத்தை சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு கூற ஆரம்பித்தார். தற்போது அவர் நாவலை படித்த அனைவருக்கும் ஒரு உணர்ச்சி இருக்கும். ஆனால் இந்த படம் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாமல் மொட்டையாக இருந்தது. வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை சிற்றரசர் எனக் கூறுவார்கள், ஆனால் அவர் பெண்களிடம் வம்பு இழுத்துக் கொண்டு பிளேபாயாக இருப்பார். பழைய காலத்து படம் எடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு அங்கங்கே பழைய சாக்கு துணிகளையும், சாமியானா பந்தல்களையும் போட்டு இந்த படத்தை எடுத்துள்ளார்கள். ஒருவருக்கும் கெட்டப் சரியாகவே பொருந்தவில்லை என்று கூறினார். 


மேலும் சண்டைக் காட்சிகளை பார்த்தால் நடனம் போலவும், நடன காட்சிகளை பார்த்தால் சண்டை போலவும் இருந்தது. அங்கங்கே கயிறு கட்டி தூக்கி கொண்டு இருக்கிறார்கள். மிகப்பெரிய அரசர் ராஜ ராஜ சோழன் என்று சொல்கிறார்கள், ஆனால் அவருக்கு அடிக்கடி ஏதாவது ஆபத்து ஏற்படுகிறது. அப்பொழுது ஜகன்மோகினி படத்தில் வரும் ஆயா போல் ஏதோ ஒன்று வந்து காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. அந்த காட்சிகள் எல்லாம் எந்தவிதமான உணர்ச்சியும் ஏற்படுத்தவில்லை. பிரம்மாண்டம் பிரம்மாண்டம் என்று சொல்கிறார்கள், இவர்கள் எல்லாம் வட இந்தியாவில் எடுக்கப்பட்ட பத்மாவத் போன்ற படங்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். பொன்னியின் செல்வன் படத்தை வட இந்தியர்களிடம் காட்டினால் அவன் பான்பராக் வாயினால் காறி துப்பி விடுவான் என்று கடுமையாக விமர்சித்தார். அவர்கள் முழு விமர்சனத்தை நீங்களும் காண… Watch the below video..

Youtube Video Code Embed Credits: Tamil Talkies

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்