Categories: சினிமா

PS -2 படத்தில் இருந்து அடுத்த தரமான மெலடி பாட்டு “சின்னஞ்சிறு நிலவே” வெளியானது..!

வெளியிட்டது

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இருந்து தற்போது அடுத்த பாடலாக “சின்னஞ்சிறு நிலவே” வெளியாகியுள்ளது. இதில் ஆதித்த கரிகாலனுக்கும் நந்தினிக்கு இடையேயான காதல் பற்றி அழகான வீடியோ வெளியாகியுள்ளது. தமிழில் இருக்கும் பிரம்மாண்ட நாவலை படமாக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டு தோற்று போயுள்ளனர். ஆனால் அந்த சாதனையை மணிரத்னம் நிகழ்த்தி காட்டியுள்ளார். விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்திக், சரத்குமார், பார்திபன், பிரகாஷ் ராஜ் என பல நடிகர்களுடன் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது இந்த திரைப்படம். இதில் இரண்டாவது பாகம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான ப்ரோமோஷன் பணிகளில் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளது படக்குழு. தமிழக்தில் கோயம்புத்தூர், திருச்சி, சென்னை போன்ற நகரங்களில் ப்ரோமோஷன் பணிகளை தொடங்கியுள்ளது படக்குழு. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

PS -2 படத்தில் இருந்து அடுத்த தரமான மெலடி பாட்டு "சின்னஞ்சிறு நிலவே" வெளியானது..! 1

மேலும் இந்தியாவில் மும்பை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சின் போன்ற நகரங்களில் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளது படக்குழு. இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடுக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. முதல் பாகம் சுமார் 500 கோடி வசூலை குவித்து இருப்பதாக தகவல் வெளியான நிலையில் இரண்டாவது பாகத்திற்க்கான எதிர்பார்ப்பு நிலவுகிறது. முதல் பாகத்தின் கிளைமாக்ஸில் பல திருப்பங்கள் நடந்துள்ளது. அதில் நந்தினியின் உருவத்தை போலவே இருக்கும் ஊமை ராணி கடலில் விழுந்த அருள்மொழி வர்மரை காப்பாற்ற உள்ளே குதிக்கிறார். மேலும் ஆதித்த கரிகாலன் நந்தினி இருக்கும் கடம்பூர் மாளிகை நோக்கி வந்து கொண்டிருக்கின்றார். கரிகாலனை பழி வாங்க நினைக்கும் நந்தினி கத்தியை பட்டை தீட்டி தயார் நிலையில் வைத்து இருக்கிறார். அருள்மொழி வர்மர் காப்பாற்றப்படுவாரா? நந்தினி ஆதித்த கரிகாலனை கொலை செய்வாரா? பின்பு என்ன நடந்தது? அரியணை யாருக்கு கொடுக்கப்பட்டது என்ற கேள்விகளுக்கு எல்லாம் விடை அளிக்கும் விதமாக இரண்டாம் பாகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறு வயதில் இருந்தே நந்தினி மீது காதல் கொள்ளும் ஆதித்த கரிகாலன் நந்தினி பெரிய பழுவேட்டரையரை திருமணம் செய்துகொண்டு தஞ்சாவூரில் இருக்கிறார். இதனால் மனம் வேதனை அடைந்த ஆதித்த கரிகாலன் காஞ்சிபுரத்தில் வசிக்கிறார். இதற்கிடையில் நந்தினி கடம்பூர் மாளிகளிக்கு வருகை புரிந்துள்ளார். அப்போது அருள்மொழி வர்மன் கடலில் விழுந்து இறந்த செய்தி நாடு முழுவதும் பரவ, கடம்பூர் மாளிகையில் இருந்து நந்தினி ஆதித்த கரிகாலனை அழைக்கிறார். அவரும் கிளம்பி செல்கிறார். இத்துடன் முதல் பாகம் முடிந்துள்ளது. தற்போது ஆதித்த கரிகாலன் நந்தினி காதலை விளக்கும் அழகிய “சின்னஞ்சிறு நிலவே” மெலடி பாடல் வெளியாகியுள்ளது. நீங்களும் அந்த வீடியோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..! 

Youtube Video Embed Code Credits: Tips Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்