ஈரமான ரோஜாவே சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பார்த்திபன் மற்றும் காவியாவின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வரும் பார்த்திபனின் அத்தை தேவி, காவியா மற்றும் ஜீவா இருவரும் காதலித்தபோது எடுத்துக் கொண்ட வீடியோக்களை திருமண மண்டபத்தில் இருக்கும் மிகப்பெரிய திரையில் போட்டு காண்பிக்கிறார். இதனால் காவியா தேவியின் காலில் விழுந்து கதறி அழுகிறார். ஈரமான ரோஜாவே சீரியலில் பார்த்திபனுக்கும் பிரியாவிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கும். ஆனால் பார்த்திபனின் அத்தை தனது மகளை தான் பார்த்திபன் திருமணம் செய்ய வேண்டும் என்கிற நோக்கில் பார்த்திக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பிரியாவை கடத்திவிடுவார். இதனால் திருமண மண்டபத்தில் குழப்பம் நீடிக்கும். இந்த நிலையில் பிரியாவின் தங்கையான காவியாவை பார்த்திபனுக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள். தந்தை தனது காலில் விழுந்து கதறியதால் விருப்பம் இல்லாமல் இந்த திருமணத்திற்கு காவியாவும் சம்மதித்து விடுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் ஒரு திருப்பம் என்னவென்றால் பார்த்திபனின் தம்பி ஜீவாவை காவியா காதலித்து வருகிறார். தனது அக்காவை பார்த்திபன் திருமணம் செய்து கொள்ளும் நிலையில், அவரது தம்பியை காவியா உயிருக்கு உயிராக காதலித்து வருகிறார் காவியா. ஆனால் திருமணம் அன்று இந்த ஜோடிகள் மாறிவிடுகிறது. பிரியாவை கண்டுபிடித்து திருமண மண்டபத்திற்கு ஜீவா அழைத்து வருகிறார். ஆனால் அதற்குள் பார்த்திபனுக்கும் காவியாவிற்கும் திருமணம் முடிந்து விடுவதால் கடைசியில் ஜீவாவிற்கு பிரியாவை திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். இந்த குழப்பங்கள் எல்லாம் நீங்கி தற்போது இந்த நாடகம் முடிவுக்கு வரும் சூழலில் இருந்தது. பார்த்திபனுக்கும் காவியாவிற்கும் மீண்டும் திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்திருந்தனர். தற்போது திருமணமும் முடிந்து பார்த்திபன் காவியா வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தனது மகளை திருமணம் செய்து கொள்ளாத பார்த்திபனையும் அதற்கு தடையாக இருக்கும் காவியாவையும் பழி வாங்குவதற்காக பார்த்திபனின் அத்தை தேவி பென்டிரைவ் ஒன்றை எடுத்துக்கொண்டு திருமண மண்டபத்திற்கு வருகிறார்.

மண்டபத்தில் இருக்கும் மிகப்பெரிய திரையில் காவியாவும் ஜீவாவும் காதலித்த பழைய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை ஒளிபரப்பு செய்கிறார். இதனால் பார்த்திபனும் பிரியாவும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றனர். மேலும் காவியா தேவியின் காலில் விழுந்து இதை தயவு செய்து நிறுத்த சொல்லுங்கள் என்று கதறி அழுகிறார். மேலும் பார்த்திபன் மற்றும் பிரியா என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Code Embed Code Credits: Vijay Television