Categories: சினிமா

பொன்னியின் செல்வன் கிளைமாக்ஸ் கப்பல் சண்டை காட்சிகள் எப்படி எடுத்து இருக்காங்கனு பாருங்க

வெளியிட்டது

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகத்தில் வரும் கிளைமாக்ஸ் காட்சிகளின் கப்பல் சீன்கள் எவ்வாறு எடுக்கப்பட்டது என்ற மேக்கிங் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டு இருக்கிறது. தமிழ் ரசிகர்களால் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்த படம் தான் பொன்னியின் செல்வன். இது செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியானது. இரண்டு பாகமாக உருவாகிய இந்த படத்தின் முதல் பாகம் வெளியான நிலையில் இரண்டாவது பாகம் இன்னும் ஆறு முதல் 8 மாதத்திற்குள் வெளியாகும் என்று இயக்குனர் மணிரத்னம் தெரிவித்திருந்தார். படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. நாவல் படித்தவர்கள் சிலர் மட்டுமே படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்ற குறையை வெளிப்படுத்தி இருந்தனர். நாவல் படிக்காத பலருக்கும் இது படம் மிகவும் பிடித்திருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

பொன்னியின் செல்வன் கிளைமாக்ஸ் கப்பல் சண்டை காட்சிகள் எப்படி எடுத்து இருக்காங்கனு பாருங்க 1

மேலும் படம் வசூலை வாரி குவித்து வருகிறது. தமிழகத்தில் மட்டும் 100 கோடிக்கும் அதிகமான வசூலை கொடுத்திருப்பதாக லைகா ப்ரொடக்ஷன் இன்றைய தினம் அறிவித்து இருந்தது. படம் வெளியான நாள் முதல் இன்று வரை பாகுபலி ரசிகர்களுக்கும் தமிழ் ரசிகர்களுக்கும் வார்த்தை போர் நீடித்து வந்தது. தற்போது தான் அந்த சர்ச்சை சற்று குறைந்திருக்கிறது. பாகுபலி வெளியான குறுகிய காலத்திலேயே 1000 கோடிக்கும் அதிகமான வசூலை கொடுத்திருந்தது. எனவே பொன்னியின் செல்வன் படமும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலை குவிக்க வேண்டும் என்று படம் பார்த்தவர்கள் திருப்பி திருப்பி பொன்னியின் செல்வன் படத்தை சென்று பார்த்து வருகின்றனர். படத்தின் முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் காட்சியாக வந்திய தேவனும், அருள்மொழி வர்மனும் கடலில் குதிப்பது போன்ற காட்சிகளை வடிவமைத்திருந்தனர்.

நடுநிசியில், நடுக்கடலில், புயலினால் உடையும் கப்பலில் மூழ்கி போகும் அருள் மொழியையும் வந்திய தேவனையும் இலங்கை தீவில் இருக்கும் ஊமைப் பெண் காப்பாற்றுவது போன்ற காட்சியோடு முதல் பாகத்தை முடித்து இருந்தனர். அந்த ஊமைப் பெண் நந்தினி போல் இருந்ததாலும் பலருக்கும் சுவாரஸ்யம் அதிகமாகி இருந்தது. இந்த நிலையில் நடுக்கடலில் கப்பலில் ஜெயம் ரவியும் கார்த்தியும் சண்டை போடும் காட்சிகளை எவ்வாறு எடுத்தனர் என்ற மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. சண்டைக்காட்சிகளில் மிகவும் கஷ்டப்பட்டு இருவரும் நடித்துள்ளனர். அந்த காட்சிகளை நீங்களும் காண.. Watch the below video..

Youtube Video Code Embed Credits: Trend Talks

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்