ஆலியா பட்டுக்கு வீட்டிலேயே எளிமையாக நடந்த வளைகாப்பு.! வெளியான அழகிய புகைப்படங்கள்

பாலிவுட் காதல் ஜோடிகளான ரன்பீர் மற்றும் ஆலியா பட் இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் ஆல்யா பட்டுக்கு தங்களது வீட்டிலேயே எளிமையாக திருமண வளைகாப்பு நடைபெற்றுள்ளது. அந்த புகைப்படங்களை தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றனர். சமீபத்தில் தான் தங்களது திருமணம் செய்தியை ஆல்யா மற்றும் ரன்பீர் அறிவித்தார்கள். அவர்களின் திருமணம் அவர்கள் வீட்டில், அவர்களுக்கு பிடித்தமான இடமான பால்கனியில் வைத்து நடைபெற்றது. ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்ட இவர்கள் ஜூன் மாதம் தங்களின் குழந்தையின் வருகைக்காக காத்திருக்கிறோம் என்று அறிவித்தார்கள். இது அவர்களது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

ஆலியா பட்டுக்கு வீட்டிலேயே எளிமையாக நடந்த வளைகாப்பு.! வெளியான அழகிய புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவர்களின் திருமண செய்தியை தொடர்ந்து ரன்பீர் – ஆலியா ஜோடி எங்கு சென்றாலும் அதுவே வைரலாகி வந்து கொண்டிருந்தது. சமீபத்தில் படத்தின் ப்ரோமோஷன் விழாவிற்கு சென்ற ரன்பீர், ஆலியாவை பத்திரமாக மேடையில் இருந்து கீழே இறக்கிய வீடியோக்களும் வைரல் ஆகி இருந்தது. மேலும் தனது கர்ப்ப கால உடை தேர்வு, ஃபேஷன் பற்றியும் ஆலியா பட் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் தசரா நிகழ்ச்சியின் போது ஆலியா பட்டின் வளைகாப்பும் நடைபெற்றுள்ளது. மிகவும் சிம்பிளாக ரன்பீர் கபூரின் மும்பை வீட்டில் வைத்து இந்த வளைகாப்பு நடந்து இருக்கிறது. மஞ்சள் நிற அனார்கலி உடன் ஆலியா தோன்றினார். மேலும் அவருக்கு நெருக்கமான உறவினர்கள் நண்பர்கள் மட்டுமே இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

தொடர்புடையவை  விஜய் தேவார கொண்டாவுடன் செம்ம ரொமான்ஸ் செய்யும் சமந்தா.! குஷி ட்ரைலர் வெளியானது.!

ஆலியா பட்டுக்கு வீட்டிலேயே எளிமையாக நடந்த வளைகாப்பு.! வெளியான அழகிய புகைப்படங்கள் 3

விளம்பரம்

ஆலியா பட் இன் தங்கைகள் பூஜா பட், ஷமீன் பட், ரன்பீரின அம்மா நீத்து கபூர், மற்றும் கரிஷ்மா கபூர் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டிருந்தனர். ரன்பீரின் அம்மா மற்றும் அக்கா ஆலியாவையும் முத்தமிடும் புகைப்படங்களும் லைக்ஸை செய் குறித்து இருந்தது. இவர்களுடன் பாலிவுட் பிரபலங்களான கரன் ஜோகர், அனுஷ்கா ரஞ்சன், அயன் முகர்ஜி ஆகியோரும் ஆல்யா பட்டின் வளைகாப்புக்கு வந்து வாழ்த்துக்களை கூறியிருந்தார்கள். அந்த புகைப்படங்களை ஆலியா பட் தனது instagram பக்கங்களில் வெளியிட்டிருந்தார்.

ஆலியா பட்டுக்கு வீட்டிலேயே எளிமையாக நடந்த வளைகாப்பு.! வெளியான அழகிய புகைப்படங்கள் 5

விளம்பரம்

 

ஆலியா பட்டுக்கு வீட்டிலேயே எளிமையாக நடந்த வளைகாப்பு.! வெளியான அழகிய புகைப்படங்கள் 7

விளம்பரம்

ஆலியா பட்டுக்கு வீட்டிலேயே எளிமையாக நடந்த வளைகாப்பு.! வெளியான அழகிய புகைப்படங்கள் 9

ஆலியா பட்டுக்கு வீட்டிலேயே எளிமையாக நடந்த வளைகாப்பு.! வெளியான அழகிய புகைப்படங்கள் 11

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment