Categories: சினிமா

வசூலில் நெருங்க முடியாத இடத்தில் வலிமை, பீஸ்ட்.! 3-வது இடத்தை பிடித்த பொன்னியின் செல்வன்

வெளியிட்டது

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி இன்று இரண்டாவது நாள். இந்த நிலையில் நேற்று முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. ஒரு படம் வெளியான உடனேயே அந்த படம் முதல் நாள் எவ்வளவு வசூலை குவித்திருக்கிறது என்பது குறித்த ஆர்வம் ரசிகர்களிடையே எழுவது வழக்கம்தான்ழ அதன்படி மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெளியான பொன்னியின் செல்வன் படம் வசூல் குறித்து தற்போது தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. 500 கோடி அளவில் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. டிக்கெட் புக்கிங் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து தியேட்டர்களும் ஹவுஸ்புல் ஆகி நிரம்பி வழிந்தது.

வசூலில் நெருங்க முடியாத இடத்தில் வலிமை, பீஸ்ட்.! 3-வது இடத்தை பிடித்த பொன்னியின் செல்வன் 1

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் வார இறுதி நாட்கள் என்பதால் டிக்கெட் விற்பனை அமோகமாக நடந்து கொண்டிருக்கிறது. தமிழ் மட்டுமல்லாமல் பான் இந்தியா மூவியாக தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் படம் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே வெளியான பாகுபலி ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப், விக்ரம் போன்ற படங்கள் இந்திய சினிமா துறையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றன. அந்த வகையில் பொன்னியின் செல்வன் இந்த படங்களை முந்த வேண்டும் என்று தமிழ் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர்ழ இதற்கிடையே பொன்னியின் செல்வன் படத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. விமர்சன ரீதியாகவும் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நாவலை படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவரும் இந்த திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

நாவலை படித்த சிலர் இந்த படத்தில் வரும் சில காட்சிகள் நாவலில் வருவது போல் இல்லை, கற்பனை கதையை இன்னும் கற்பனையாக இவர்கள் எடுத்து இருக்கிறார்கள் என்று விமர்சனமும் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை வசூல் நிலவரம் குறித்து பிரபல ஃபிலிம் அனலிஸ்ட் ஆன ரமேஷ் பாலா தன்னுடைய twitter பக்கத்தில் தகவல் ஒன்றை தெரிவித்து இருக்கிறார். அதில் முதல் நாள் வசூல் தமிழகத்தில் மட்டும் 27 கோடியை தாண்டி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் 2020 ஆம் ஆண்டு வெளியான வலிமை படம் முதலிடத்தையும் பீஸ்ட் படம் இரண்டாவது இடத்தையும் பொன்னியின் செல்வன் மூன்றாவது பெரிய ஓபனிங்கை கொடுத்து உள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். இதிலிருந்து பீஸ்ட் மற்றும் வலிமை சாதனையை பொன்னியின் செல்வன் முறியடிக்கவில்லை என்பது தெரிகிறது.

இருந்தபோதிலும் இன்னும் நான்கு நாட்கள் விடுமுறை தினங்கள் என்பதால் மேலும் படம் வசூலில் பட்டையை கிளப்பும் என்று தெரிகிறது. தமிழகம் மட்டுமல்லாது ஹிந்தி தெலுங்கு கன்னடம் மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வசூல் களைகட்டி வருகிறது. தமிழ் ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே பொன்னியின் செல்வன் திரைப்படமும் ஆயிரம் கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்