“டீசருக்கு டீஸர் வெளியிட்டுள்ள விஷால்…என் கடமை எம்.ஜி.ஆர் முதல் தெறி விஜய் வரை அவ்ளோ ரெஃபரென்ஸ்”!!

நடிகர் சங்க செயலாளர், நாயகன் , தயாரிப்பாளர் என பல்வேறு வேலைகளில் நடிகர் விஷால் அடுத்தடுத்து சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார். நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டி முடித்த பின்பு தான் திருமணம் என்று இவர் அறிவித்து பல்வேறு இன்னல்களில் சிக்கிக்கொண்டு தவித்து வருகிறார். இன்னும் கட்டப்படாமல் இருக்கும் சங்கம் கட்டிடம் எப்போது முடிக்கப்படும், இவருக்கு எப்போது திருமணம் நடக்கும் என்று தெரியவில்லை.

சில காலங்களாக விஷாலை பற்றி தொடர்ந்து பல புகார்கள் வந்த வண்ணமே உள்ளது. இவர் நடிக்கும் படங்களில் அடிக்கடி இயக்குனருடன் விஷாலுக்கு சண்டை வந்து கொண்டே இருக்கிறது. ஏனென்றால் எந்த ஒரு படப்பிடிப்பிலும் விஷால் ஒழுங்காக கலந்து கொள்வது இல்லையாம்.

விளம்பரம்

"டீசருக்கு டீஸர் வெளியிட்டுள்ள விஷால்...என் கடமை எம்.ஜி.ஆர் முதல் தெறி விஜய் வரை அவ்ளோ ரெஃபரென்ஸ்"!! 1

இதனால் தயாரிப்பு நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்படுகிறதாம். ஆனால் இதையெல்லாம் கேட்டால் உங்களுக்கு என்ன நஷ்டம், என் சம்பளத்தில் கழித்துக் கொள்ளுங்கள் என அசால்ட்டாக விஷால் சொல்லிவிட்டு செல்கிறாராம். இதனால் விஷாலுக்கு தற்போது படவாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகிறது.

விளம்பரம்

இந்நிலையில் விஷாலின் நண்பர்களான நந்தா பற்றும் ரமணா இருவரும் தயாரிக்கும் லத்தி படத்தில் விஷால் நடித்து வருகிறார். இப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயற்றியுள்ளார். இது ஐந்து மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக உருவாகிறது. மேலும் இது விஷாலின் முதல் பான் இந்திய திரைப்படமாகும்.

தொடர்புடையவை  மகனை கதாநாயகனாக ஆக்கியது தங்கர் பச்சான் பேட்டி!!

"டீசருக்கு டீஸர் வெளியிட்டுள்ள விஷால்...என் கடமை எம்.ஜி.ஆர் முதல் தெறி விஜய் வரை அவ்ளோ ரெஃபரென்ஸ்"!! 3

விளம்பரம்

லத்தி படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மிகவும் உடலை வருத்தி கொண்டு இந்த படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஷால். ஏற்கனவே இந்த படத்தின் ஷூட்டிங்கில் கீழே விழுந்து ஆடிபட்டுக்கொண்ட அவர் இருப்பினும், அன்றைய ஷூட்டிங்கை சிறப்பாக முடித்த கொடுத்து சென்றுள்ளார். இப்பொது இத படம் கிட்டத்தட்ட அனைத்து படப்பிடிப்பிப்புகளும் முடிந்து வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.

எப்போதும் படத்தின் முன்னோட்டமாக டீஸர் வெளியாகும், ஆனால் இந்த படக்குழு டீசருக்கு டீஸர் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ இபோது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் என்கடமை எம்.ஜி.ஆர் முதல் தெறி விஜய் வரை தமிழ் சினிமாவில் போலீசாக நடித்து வெற்றி கண்ட நடிகர்கள் ரெபெரென்ஸ் அனைத்துமே இடம்பெற்றுள்ளது.

விளம்பரம்

Video Courtesy – Vishal Film Factory

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment