பொன்னியின் செல்வன் படத்திலிருந்து தற்போது சில ப்ரோமோ காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. அதில் பாண்டியர்கள் எவ்வாறு சோழ தேசத்தின் அரியணையைப் பிடிக்க சூழ்ச்சி செய்கின்றனர் என்பது பற்றிய வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டு இருக்கிறது. திருச்சி, தஞ்சை பகுதிகளில் ஆட்சி செலுத்தியவர்கள் சோழ மன்னர்கள். இவர்களைப் பற்றிய வரலாற்று புதினம்தான் பொன்னியின் செல்வன். இதை 1950 களிலேயே கல்கி மிகப் பிரம்மாண்டமான நாவலாக எழுதியிருக்கிறார். இது மொத்தம் ஐந்து பாகங்களாக வெளிவந்திருக்கிறது. இந்த கதை குறித்து பார்க்கும் பொழுது சோழ மன்னர்களின் அரியணைக்கு பாண்டிய மன்னர்களிடமிருந்து எவ்வாறு ஆபத்து வந்தது? அதிலிருந்து எவ்வாறு சோழர்கள் தங்கள் அரிய அணியை காத்தனர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

மேலும் சோழ ஆட்சியை வடக்கில் கங்கை வரையும், தெற்கில் ஜாவா, சுமத்ரா தீவுகளையும், ஈழத்தையும், அதையும் கடந்து சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளையும் எவ்வாறு பிடித்தனர் என்பது பற்றிய கதைதான் பொன்னியின் செல்வன். இதை படமாக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு தோற்றுப் போகவே, தற்போது மணிரத்தினம் இதை இயக்கி சாதனை புரிந்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 30ம் தேதி முதல் பாகம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் சில ப்ரோமோ காட்சிகள் வெளியாகி இருக்கிறது. சோழ மன்னர்களில் ராஜராஜனின் அண்ணனான ஆதித்த கரிகாலனே அடுத்த பட்டத்திற்கு உரியவன். யுவராஜா பட்டமும் அவனுக்குத்தான் சூட்டப்பட்டிருந்தது. அவன் மதுரையில் இருந்த ஆட்சி புரிந்த வீரபாண்டியன் தலையை துண்டாக்கி கொலை செய்து விடுவான்.
இதனால் வீரபாண்டியனின் ஆபத்துதவிகள் சூழ்ச்சி செய்து சோழ அரண்மனைக்குள் புகுந்து விடுவார்கள். ஆபத்துதவிகள் என்பவர்கள் தன் உயிரை கொடுத்தாவது மன்னன் உயிரை காப்பாற்றும் தீவிரமான ஒரு படையாகும். இவர்கள் எப்பொழுதும் மன்னரை சுற்றியே இருப்பார்கள். மன்னர்களுக்கு ஒரு ஆபத்து கூட நேராமல் பார்த்துக் கொள்பவர்கள். சோழர்களுக்கு இதுபோல “வேளக்கார படை” உண்டு. அதேபோலத்தான் பாண்டிய மன்னர்களுக்கு “ஆபத்துதவிகள்”. பாண்டிய மன்னன் வீரபாண்டியன் இறந்த பின்பு எவ்வாறு ஆபத்துதவிகள் சூழ்ச்சி செய்கின்றனர் என்பது குறித்து தற்போது சில ப்ரோமோ காட்சிகள் வெளியாகி இருக்கிறது. மிகவும் ஆர்வமாக இருக்கும் அந்த காட்சிகளை நீங்களும் பாருங்கள்.. Watch the below video..
YouTube Video Code Embed Credits: Moviebuff Tamil