மும்பையில் 70 கோடியில் வீடு வாங்கி குடியேறிவிட்டாரா சூர்யா? இணையத்தில் கசிந்த புது வீடியோ.!

நடிகர் சூர்யா மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், அவர் தற்போது மும்பையில் இருந்து ஒரு அப்பார்ட்மெண்டில் இருந்து வெளியே வருவது போன்ற வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் இதுதான் சூர்யா வங்கி இருக்கும் புது வீடா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது வரை சுமார் 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா உடன் இணைந்து தற்போது தனது 42வது படமான சரித்திர கதையில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த கதையில் இவர் பத்துக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்ற நிலையில் படத்தின் அப்டேட்டுகளுக்காக சூர்யாவின் ரசிகர்கள் காத்து கிடைக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்த பயில்வான், சூர்யா குறித்தும் ஜோதிகா குறித்தும் ஒரு தகவலை பகிர்ந்து இருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மும்பையில் 70 கோடியில் வீடு வாங்கி குடியேறிவிட்டாரா சூர்யா? இணையத்தில் கசிந்த புது வீடியோ.! 1

விளம்பரம்

அதில் அவர் சூர்யா தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் குடியேறிவிட்டதாகவும், தமிழ் படங்களில் நடிக்கும் போது மட்டுமே அவ்வப்போது சென்னைக்கு வந்து சென்று கொண்டிருக்கிறார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறினார். அதற்கு முக்கிய காரணமாக சூர்யா ஜோதிகாவை திருமணம் செய்து கொள்ளும்போதே படத்தில் நடிக்க கூடாது என்று சிவக்குமார் உறுதி வாங்கி இருந்ததாகவும், பின்னர் பெண்களை மையப்படுத்திய கதையில் மட்டுமே நடிக்க இருப்பதாக கூறிவிட்டு தற்போது மம்முட்டியுடன் இணைந்து ஒரு படத்தில் ஜோதிகா நடித்து வருவதாகவும், இது சூர்யாவின் தந்தை சிவகுமாருக்கு பிடிக்கவில்லை என்றும் அதனால் அவர்கள் மும்பையில் ஒரு வீட்டை வாங்கி குடியேறிவிட்டார்கள் என்றும் பயில்வான் ரங்கநாதன் அதிர்ச்சி தகவல்களை கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று காலை முதல் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாக தொடங்கியது.

தொடர்புடையவை  நயன்தாராவின் குட்டி மகன்கள் செய்த வேலை.! அழகிய புகைப்படத்தை பகிர்ந்த அப்பா விக்னேஷ் சிவன்

விளம்பரம்

அதில் காரில் வரும் சூர்யா ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட் ஒன்றில் நுழைகிறார். அந்த வீடியோவை பகிர்ந்த சிலர் சூர்யா மும்பையில் 70 கோடிக்கு வாங்கி இருக்கும் வீடு இதுதான் என்ற ரீதியில் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. மேலும் சூர்யா தனது பிள்ளைகளை மும்பையில் உள்ள மிகப்பெரிய பள்ளி ஒன்றில் சேர்த்துள்ளதாகவும், நடிப்பதற்கு மட்டுமே அவர் சென்னைக்கு வந்து செல்ல இருப்பதாகவும் தகவல்கள் கொடிகட்டி பறந்த வண்ணம் இருக்கின்றன. சூர்யா தரப்போ ஜோதிகா தரப்போ இது குறித்து எந்த விதமான விளக்கமும் தரவில்லை. இருந்தபோதிலும் சமீப காலமாக மும்பை விமான நிலையத்திலிருந்து வெளியாகும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், மும்பையில் பிரபல உணவகங்களுக்கு செல்வது என்று சூர்யாவின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தொடர்ந்து மும்பையில் இருந்து வெளியாவதால் இதில் உண்மை இருக்குமோ என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். நீங்களும் அந்த செய்தியை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

தொடர்புடையவை  நான் அவரை இறுகக் கட்டிப்பிடித்து, சொல்ல நினைத்த அனைத்தையும் சொன்னேன்..ஷாருக் கானுக்கு கட்டிப்பிடி வைத்தியம் கொடுத்த DD

Youtube Video Embed Code Credits: Polimer News

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment