Categories: சினிமா

பொன்னியின் செல்வன் பாகம் 2ல் இருந்து அடுத்த பாடல் “சிவோஹம்” வெளியானது.! தரமா இருக்கு பாட்டு.!

வெளியிட்டது

பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து தற்போது சிவோஹம் என்கிற பாடல் வெளியாகியிருக்கிறது. வெளியான சில நிமிடங்களில் இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு தற்போது அதை சாதித்தும் காட்டியிருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, கார்த்திக், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ் என மிகப் பெரிய நடிகர் பட்டாளத்தை வைத்து இந்த படத்தை அவர் இயக்கி காட்டி இருக்கிறார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கிறது. முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியான நிலையில் இரண்டாவது பாகம் வருகிற 28ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் படத்தின் டிரைலர் பாடல்கள் என ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. ஏற்கனவே அக நக என்கிற பாடலும் வீரா ராஜா வீரா என்கிற பாடலும் வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் பாகம் 2ல் இருந்து அடுத்த பாடல் "சிவோஹம்" வெளியானது.! தரமா இருக்கு பாட்டு.! 1

இந்த நிலையில் படத்திலிருந்து அடுத்த பாடலாக சிவோஹம் என்கிற பாடல் வெளியாகி இருக்கிறது. இந்த பாடலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. முதல் பாகத்தில் பல திருப்பங்கள் விடை தெரியாமல் அப்படியே நிற்கிறது. அதனை அனைத்திற்கும் இரண்டாம் பாகத்தில் விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊமை ராணி யார்? இலங்கையில் வசிக்கும் அவள் ஏன் தஞ்சாவூரில் இருக்கும் நந்தினி போலவே உருவத்தோற்றம் கொண்டிருக்கிறாள்? அருள்மொழிவர்மனை ஊமை ராணி காப்பாற்ற வேண்டிய அவசியம் என்ன? கடலில் விழுந்த அருள்மொழிவர்மர் என்ன ஆனார்.? கரிகாலன் நந்தினி இருக்கும் இடம் நோக்கி வந்து கொண்டிருக்கிறாரே? நந்தினி கரிகாலனை கொலை செய்வாரா? அடுத்த பட்டத்திற்கு மதுராந்தக தேவன் உரியவன் ஆவானா? அல்லது ராஜராஜ சோழன் அரியணை ஏறுவானா என்பது குறித்த விடையாக இரண்டாம் பாகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்கள் செல்ல செல்ல படத்திற்கு மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி வருகிறது.

படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்தியா மூவியாக ஐந்து மொழிகளில் உருவாகி இருக்கிறது. முதல் பாகம் 500 கோடி வசூலை நெருங்கிய நிலையில் இரண்டாவது பாகம் அதற்கு அதிகமான வசூலை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற படங்கள் ஆயிரம் கோடிக்கு அதிகமான வசூலை குவித்திருக்கும் நிலையில் பொன்னியின் செல்வன் அதற்கு அதிகமாக வசூலிக்க வேண்டும் என்பதே தமிழர்கள் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் சிவோஹம் பாடலை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Tips Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்