பொன்னியின் செல்வன் படத்திலிருந்து ராட்சஸ மாமனே என்ற பாடல் தற்போது வெளியாகியிருக்கிறது. தமிழில் இருக்கும் பிரம்மாண்ட நாவலான பொன்னியின் செல்வனை அடிப்படையாகக் கொண்டு மணிரத்தினம் இயக்கி இருக்கும் படம் தான் பொன்னியின் செல்வன். இது இரண்டு வருடங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டது. ஆனால் கொரோனா காரணங்களால் படபிடிப்பு தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து, செப்டம்பர் 30-ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு, பார்த்திபன், ஜெயராம், திரிஷா ஐஸ்வர்யாராய் என மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா கடந்த ஆறாம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது இந்த விழாவிற்கு கமலஹாசன், ரஜினிகாந்த், இயக்குனர் சங்கர் என அனைவரும் வருகை புரிந்து இருந்தனர். இந்த விழாவின் போது படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியிடப்பட்டது. ஏற்கனவே படத்திலிருந்து பொன்னி நதி, சோழா சோழா என்ற இரண்டு பாடல்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது மூன்றாவது பாடலாக ராட்சஸ மாமனே என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது. படத்தின் டீசர், ட்ரெய்லர் வீடியோ பாடல்கள் என அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாகி இருக்கிறது.
படம் குறித்த அப்டேட்டுகளை ஒவ்வொன்றாக படக்குழு வெளியிட்டு வருகிறது. அதன் படி இன்று காலை படத்திலிருந்து மூன்றாவது பாடலான ராட்சஸ மாமனே மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது இந்த பாடல் வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த பாடலை காண.. Watch the below video..
YouTube Video Code Embed Credits: Tips Tamil