Categories: சினிமா

சரத்குமார் பார்த்திபனின் தோற்றங்களை வெளியிட்டது பொன்னியின் செல்வன் படக்குழு

வெளியிட்டது

பொன்னியின் செல்வன் படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது பழுவேட்டரையர்களாக நடித்துள்ள பெரிய பழுவேட்டரையர், சின்னப் பழுவேட்டரையர் ஆகியோரின் தோற்றங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது தான் இந்த படம். இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பான் இந்தியா மூவியாக வெளியாக உள்ளது. இந்த படத்தில் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன் என மிகப் பெரிய நடிகர் பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

சரத்குமார் பார்த்திபனின் தோற்றங்களை வெளியிட்டது பொன்னியின் செல்வன் படக்குழு 1

படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதோடு படத்தின் முதல் சிங்கிள் பாடலான பொன்னி நதி பாக்கணுமே என்ற பாடல் பலருக்கும் பிடித்தமான பாடலாக மாறிப் போனது. இதை அடுத்து விக்ரமின் ஆதித்த கரிகாலனின் பெருமை சொல்லும் சோழா சோழா என்ற இரண்டாவது பாடல் வெளியானது. அதன் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் படத்தின் டிரைலர் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக வெளியீட்டுக்கு தயாராகி இருக்கிறது. வருகின்ற ஆறாம் தேதி மாலை இந்த படத்தின் டிரைலர் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த ட்ரெய்லரை வெளியிட கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில் சரத்குமார் மற்றும் பார்த்திபனின் கதாபாத்திரங்களின் தோற்றங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. பொன்னியின் செல்வன் நாடகத்தில் மிக முக்கியமான கதாபாத்திரங்களாக இருப்பவர்கள் பழுவேட்டையர்கள். இதில் பெரிய பழுவேட்டையரராக சரத்குமாரும் சின்ன பழுவேட்டையரராக பார்த்திபனும் நடித்துள்ளனர். Twitter Original Source from: Lyca Productions

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்