மறைந்த நடிகர் திரு மயில்சாமி அவர்களின் இறுதி ஊர்வலம் தற்போது தொடங்கி இருக்கிறது. அவருக்கு அலை அலையாய் திரண்டு வந்து ரசிகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையாருக்கு அணிவிக்கப்பட்டு பூஜை செய்யப்பட்ட வெட்டிவேர் மாலையும் அவர் உடலில் போர்த்தப்பட்டு தற்போது அவர் உடல் தகனம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 1984 ஆம் ஆண்டு தாவணி கனவுகள் என்கிற படத்தில் கூட்டத்தில் நிற்கும் ஒருவராக நடித்தவர் நடிகர் மயில்சாமி. பின்னர் இவர் தன்னுடைய அயராத முயற்சியால் 1984 ஆம் ஆண்டு வெளியான வெற்றி விழா என்கிற படத்தில் குஷ்புவுக்கு சகோதரர் கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின்னர் இவர் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். முன்னணி நடிகர்களாக இருந்த அனைவருடனும் குறுகிய காலத்திலேயே நடிக்க தொடங்கிய இவர், பின்னாளில் விவேக் உடன் சேர்ந்து செய்த காமெடிகள் மிகப் பிரபலம். குறிப்பாக தூள் படத்தில் விவேக்கும் இவரும் செய்த காமெடிகள் வயிறு குலுங்க சிரிப்பை வரவழைக்கும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த மயில்சாமி சிவ பக்தராகவும் இருந்து வந்தார். 57 வயதாகும் இவர், இரண்டு நாட்களுக்கு முன்பு சிவராத்திரிக்காக சென்னையில் உள்ள ஒரு கோவிலில் பாட்டுகள் பாடியும், கச்சேரிகள் நடத்தியும் வந்தார். விழாவை முடித்துக்கொண்டு அதிகாலை 3 மணிக்கு திரும்பிய அவர் வீட்டிற்கு செல்லும் வழியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே உயிரிழந்திருக்கிறார். இந்த சம்பவம் தமிழ் திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இவருக்கு திரை பிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள் என அனைவரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தனது நகைகளை கூட விற்று ஏழைகளுக்கு உதவி செய்து வந்திருக்கிறார் மயில்சாமி. அந்த நன்றிக்காக பலரும் மயில்சாமியின் இறுதி அஞ்சலிக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று அவரது உடல் தகனம் நடைபெற்று இருக்கிறது. அவரது உடலுக்கு திருவண்ணாமலை கோவிலில் இருந்து அண்ணாமலையாருக்கு சாத்தப்பட்ட வெட்டிவேர் மாலை சாத்தப்பட்டு அவர் உடல் மின் மயானதிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

வடபழனியில் உள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டிருக்கிறது. அப்போது கைலாய வாத்தியங்கள் முழங்க அவரது உடல் எரியூட்டப்பட்டிருக்கிறது. சிவராத்திரி அன்று மறைந்த சிவ பக்தன் மயில்சாமிக்கு அண்ணாமலையாரின் மாலையுடன் சிவ வாத்தியங்கள் முழங்க இப்படி ஒரு இறப்பு நிகழ்ந்திருக்கிறது, இதைவிட அவருக்கு வேறு என்ன பாக்கியம் வேண்டும் என்று சொல்லி ரசிகர்கள் கண் கலங்கி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர். அவரது உடலை இறுதியாக பார்த்த அவரது குடும்பத்தினரும் ரசிகர்களும் கண்கலங்கி அழுத சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது. அந்த வீடியோவை நீங்களும் காண உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Abp Nadu