Categories: சினிமா

அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாடிய நடிகர் Sivakarthikeyan…! வெளியான புகைப்படங்கள்..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் போட்டியாளராக பின்னர் தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி இருப்பவர். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் இருக்கிறது. விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கி இன்று முன்னணி நட்சத்திரமாக சினிமாவில் உருவெடுத்து இருக்கிறார் . இவரின் முழு கடின உழைப்பே வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்து இருக்கிறது.

அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாடிய நடிகர் Sivakarthikeyan...! வெளியான புகைப்படங்கள்..! 1

அண்மையில் இவருக்கு வெளியான பிரின்ஸ் மற்றும் அயலான் படம் மாபெரும் தோல்வியை சந்தித்து இருக்கிறது. இதனால் தனது அடுத்த படத்தில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இவருக்கு அடுத்ததாக இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில்,கமல்ஹாசன் தயாரிப்பில் அமரன் படம் வெளியாக உள்ளது. அக்டொபர் 31ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயன், தனது அலுவலகத்தில் கொண்டாடி உள்ளார். இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

வெளியிட்டது

புதிய செய்திகள்