ஆதி புருஷ் படம் பற்றி நெகடிவ் விமர்சனம் சொன்னவரை அடித்து துவைத்த பிரபாஸ் ரசிகர்கள்.! வைரல் வீடியோ.!

வெளியிட்டது

ஆதிபுருஷ் திரைபடத்தை பார்த்துவிட்டு படம் நன்றாக இல்லை என்று சொன்ன ரசிகரை தியேட்டர் வாசலிலேயே வைத்து ரசிகர்கள் அடித்து துவைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ், கிருத்தி சனோன், சைஃப் அலிகான் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் தான் ஆதிபுருஷ். இந்துக்களின் புனித நூலான ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. ராமராக ராகவ் என்ற கதாபாத்திரத்தில் பிரபாஸும், சீதாவாக ஜானகி என்ற கதாபாத்திரத்தில் கிருத்தி சனோனும், ராவணனாக சைஃப் அலிகானும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் வெளியான போது மிகுந்த கேலிக்குள்ளானது. அதற்கு முக்கிய காரணம் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகளில் ஏற்பட்ட சொதப்பலே காரணம். டீசர் மிகுந்த கேலிக்குள்ளான காரணத்தால், படக்குழு மிகுந்த அப்செட் ஆகியிருந்தது. மீண்டும் அனிமேசன் காட்சிகள் கூடுதல் செலிவிடப்பட்டு மெருகேற்றப்படும் என்று படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டு இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதி புருஷ் படம் பற்றி நெகடிவ் விமர்சனம் சொன்னவரை அடித்து துவைத்த பிரபாஸ் ரசிகர்கள்.! வைரல் வீடியோ.! 1

இந்த நிலையில் படம் இன்று உலகம் முழுவதும் எங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது. படம் பற்றி பலரும் கலவையான விமர்சனங்களைப் பெற்று இருந்தது. பலரும் படத்தைப் பார்த்துவிட்டு படம் சுமாராகவே இருப்பதாக கூறினர். அனிமேஷன் மற்றும் VFX காட்சிகள் மோசமாக இருந்தது என்று விமர்சனங்களை கூறினர். இந்த நிலையில் ஆந்திராவில் படத்தை பார்த்துவிட்டு ரசிகர் ஒருவர் படம் குறித்து நெகட்டிவ் விமர்சனங்களை கூறினார். அப்போது பேசிய அவர், படம் மிகவும் மொக்கையாக இருந்ததாகவும், பிண்ணனி இசை நன்றாக இருந்தது ஆனால் கிராஃபிக்ஸ் காட்சிகள் நன்றாக இல்லை, பிளே ஸ்டேசன் கிராஃபிக்ஸ் கூட நன்றாக இருக்கும் என்று கூறி இருந்தார். இதை கேட்ட பிரபாஸ் ரசிகர்கள் ஆவேசமடைந்தனர்.

இதையடுத்து அந்த நபரை மிகவும் கடுமையாக தாக்கத் தொடங்கினார். இதனால் நிலைகுலைந்து போன அந்த நபரை சிலர் காப்பாற்றினர். பின்னர் அந்த நபர் அந்த இடத்தை விட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என விலகி சென்றார். பிரபாஸ் ரசிகர்களின் இந்த செயலுக்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். படம் நன்றாக இல்லை என்று சொன்னதற்காக அந்த அப்பாவி மனிதரை இப்படி கொடூரமாக தாக்கியதற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்