தெலுங்கு திரையுலகின் அசைக்க முடியாத சக்தியாக இருக்கும் நடிகர் பிரபாஸ் நடிக்கும் ப்ராஜெக்ட் கே படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. சுமார் இரண்டு நிமிட கிளிம்ஸ் வீடியோவை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். நடிகையர் திலகம் என்ற படத்தை இயக்கி திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனராக இருக்கும் நாக் அஸ்வின் தற்போது பிரபாஸை வைத்து இயக்கி வரும் புதிய படம் தான் ப்ராஜெக்ட் கே. இந்த படத்தில் பிரபாஸுடன் கமலஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன் போன்ற பல நடிகர்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் க்ளிம்ப்ஸ் வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. அமெரிக்காவில் நடந்த காமிக்கான் நிகழ்ச்சியில் இந்த க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்திற்கு கல்கி 2898 ஏடி என்று பெயரிடப்பட்டுள்ளது. விஷ்ணுவின் கடைசி அவதாரமான கல்கி அவதாரமாக இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் 2898 இல் நடப்பது போல படமாக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்துக்களின் கடவுளாக இருக்கும் விஷ்ணு தனமு பத்தாவது அவதாரமான கல்கி அவதாரம் எடுக்கும் பொழுது அவர் இந்த உலகத்தை அழிப்பார் என்பதுமக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. எனவே அதை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கும் போது பலரும் கிண்டல் செய்திருந்தனர். ரசிகர்களால் உருவாக்கப்படும் ஃபேன் மேட் போஸ்டர் போல இருப்பதாக பலரும் கிண்டல் அடித்திருந்தனர். இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து தற்போது வெளியாக இருக்கும் க்ளிம்ப்ஸ் வீடியோவைப் பார்த்து பலரும் வாயடைத்து போய் இருக்கின்றனர்.
இந்த டீசர் வீடியோவில் முக்கிய கதாபாத்திரமாக நடிகர் பசுபதியும் இடம்பெற்று இருக்கிறார். மேலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலகநாயகன் கமலஹாசன் இந்த வீடியோவில் இடம் பெறவில்லை. இந்த வீடியோவில் பிரபாஸுக்கு வில்லனாக கமல் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. கதாயுதத்தை திருடிக் கொள்ளும் வில்லன் அதை தவறான முறையில் பயனபடுத்த அதை அவனிடமிருந்து மீட்பது தான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் வில்லனாக கமலஹாசன் நடிக்க இருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vyjayanthi Networks