தெலுங்கு உலகின் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ் தற்போது தனது காதலை உறுதிப்படுத்தி இருக்கிறார் ப்ரீத்தி சனோனுடன் தனது காதலை உறுதி செய்து இருக்கிறார். பிரபாஸ் 2002 ஆம் ஆண்டு ஈஸ்வர் என்கிற படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார். 2004 ஆம் ஆண்டு வெளியான வருஷம் என்கிற படத்தின் மூலமாக பிரபலம் அடைந்தார். தமிழில் இவர் நடித்த பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை இவருக்கு தேடித் தந்தது. இதன் பின்னர் இவருக்கு தமிழில் ரசிகர்கள் அதிகமாகினர். தற்போது இவர் ஆதி புருஷ் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்து வருகிறார். சமீபத்தில் ஆதிபுருஷ் படத்தின் ட்ரைலர் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது.

ராமாயண கதையை மையமாக வைத்து கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் டிரைலர் விமர்சனத்திற்கு உள்ளான காரணத்தினால், கிராபிக்ஸ் பணிகளை மெருகேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், கிராபிக்ஸ் பணிகளால் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீலின் சலார் படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். சமீபத்தில் பேட்டி அளித்திருந்த இந்த படத்தின் கதாநாயகி க்ருத்தி சனோன் திருமணம் குறித்து முதல் முறையாக மனம் திறந்து இருந்தார்.
காபி வித் கரண் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த வருண் தவான் இந்த தகவலை போட்டு உடைத்து இருக்கிறார். கீர்த்தி இதயத்தில் ஒருவர் இருக்கிறார் என்று வருண் தவான் கூற, கரண் “அந்த நபர் யார்” என்று கேட்கிறார். அதற்கு வருண் அந்த நபர் மும்பையைச் சேர்ந்தவர் இல்லை, தற்போது தீபிகா படுகோனுடன் நடித்து வருகிறார் என கூறினார். தற்போது மும்பையை சேராத ஒருவர் தீபிகா படுகோனுடன் நடித்து வருகிறார் என்றால் அது பிரபாஸ் தான். இதை யூகித்த கொண்டு அரங்கில் இருந்தவர்கள் பலரும் கைதட்டினர். முன்னதாக வேறு ஒரு படத்தின் ப்ரோமோஷன் போது பிரபாஸை திருமணம் செய்து கொள்ள வாய்ப்பு கிடைத்தால் மறுக்க மாட்டேன் என்று க்ருத்தி சனோன் கூறி இருந்தார்.
ஏற்கனவே கீர்த்தியும் பிரபாஸும் டேட்டிங்கில் ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் எனவும் தகவல்கள் வெளியான நிலையில் வருண் தவானின் இந்த பேட்டி தற்போது அதை உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும் ஆதி புருஷ் படத்தின் போது பிரபாஸ் க்ருத்தி சனோனுக்கு தனது காதலை தெரிவித்ததாகவும், விரைவில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.