Categories: சினிமா

நூற்றுக்கணக்கான நபர்களுடன் சேர்ந்து “நாட்டு நாட்டு” பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்ட பிரபு தேவா.!

வெளியிட்டது

நடிகர் பிரபு தேவா தற்போது ஆஸ்கர் விருது வாங்கிய “நாட்டு நாட்டு” பாடலுக்கு நூற்றுக்கணக்கான நபர்களுடன் சேர்ந்து நடனம் ஆடியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழின் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் பிரபுதேவா. இவர் நடன இயக்குனர் சுந்தரத்தின் மகன் ஆவார். வேகமாக நடனமாடும் திறமைக்காக இவர் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படுகின்றார். இன்றுவரை நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடனம் ஆடி இருக்கிறார். குறிப்பாக மின்சார கனவு படத்தில் வரும் வெண்ணிலவே வெண்ணிலவே பாட்டில் மிகச் சிறப்பாக நடனம் ஆடியதற்காக இந்திய தேசிய பட விருதையும் பெற்றிருக்கிறார். இவர் முதன்முறையாக 1994 ஆம் ஆண்டு “இந்து” திரைப்படத்தில் நடிகை ரோஜாவுடன் நடித்தார். இதுவே இவர் நடித்த முதல் திரைப்படம் ஆகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான நபர்களுடன் சேர்ந்து "நாட்டு நாட்டு" பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்ட பிரபு தேவா.! 1

திரைப்படங்கள் மட்டுமல்லாமல் படங்களை இயக்கியும் இருக்கிறார். போக்கிரி, வில்லு போன்ற பல படங்களையும், சில இந்தி படங்களையும் இயக்கி இருக்கிறார். இவருக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் திருமணமாகி மூன்று குழந்தைகள் இருந்தது. ஆனால் நயன்தாராவுடன் வாழ்ந்து வருவதாகவும், முதல் மனைவியை பிரிய வழக்கு தொடுத்திருந்தார். ஆனால் முதல் மனைவி இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் 2012 ஆம் ஆண்டு நயன்தாராவிடம் இருந்து நிரந்தரமாக பிரிந்து விட்டதாக அறிவித்திருந்தார் பிரபுதேவா. பின்னர் சென்னையில் இருக்க பிடிக்காமல் மும்பைக்கு சென்று அங்கு குடி பெயர்ந்து விட்டார். அவ்வபோது சென்னைக்கு வந்து பல படங்களில் நடித்து வருகிறார் பிரபுதேவா.

இவர் நடித்த காதலன், மின்சார கனவு, மிஸ்டர் ரோமியோ, காதலா காதலா, நினைவிருக்கும் வரை, வானத்தைப்போல, உள்ளம் கொள்ளை போகுதே, தேவி போன்ற படங்கள் இன்றளவும் பேசப்படும் படங்களாக இருக்கிறது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் பஹீரா. இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தரவில்லை. தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் பிரபு தேவா தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தற்போது ஆஸ்கர் விருது வாங்கிய ஆர்ஆர் ஆர் படத்தில் வரும் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!

Youtube Video Code Embed Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்