சிக்கன் கறிக்கு பதிலாக காக்கா கறியை கொடுத்ததா பிரபல நிறுவனம்?? வனிதா போட்ட பரபரப்பு ட்வீட்.!

விமான நிலையத்தில் இருந்த பிரபல சிக்கன் விற்பனை செய்யும் உணவகம் ஒன்றுக்கு சென்ற வனிதா, அங்கு சாப்பிட்டுவிட்டு தனக்கு தரப்பட்ட உணவு மிக மோசமாக இருந்ததாக தற்போது குற்றச்சாட்டு ஒன்றை எழுப்பி இருக்கிறார். மேலும் இது கோழி கறியா அல்லது காக்கா கறியா என்றும் அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். நடிகர் விஜய் உடன் இணைந்து சந்திரலேகா என்கிற படத்தில் நடிகையாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். இவர் பிரபல நட்சத்திர தம்பதிகளாக இருக்கும் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மூத்த மகள் ஆவார். ஆரம்பம் முதலே குடும்பத்தினருடன் ஏதாவது ஒரு பிரச்சனையில் ஈடுபட்டு வந்தார் வனிதா. குறிப்பாக தனது தாய், தந்தை,சகோதரிகள், கணவர் என அனைவரிடமும் இவர் மோதல் போக்கை கடைபிடித்து வந்தார். திருமணமாகி இரண்டு முறை விவாகரத்து ஆன பின்பு மூன்றாவதாக ஒருவரை திருமணம் செய்து கொண்ட வனிதா, அவருடனும் வாழ பிடிக்காமல் தற்போது தனது மகள்களுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.

தொடர்புடையவை  நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் பழைய மற்றும் புதிய போட்டியாளர்கள்..! இடையில் மாட்டிய கோமாளிகள்..! பரபரப்பின் உச்சியில் குக் வித் கோமாளி..!

சிக்கன் கறிக்கு பதிலாக காக்கா கறியை கொடுத்ததா பிரபல நிறுவனம்?? வனிதா போட்ட பரபரப்பு ட்வீட்.! 1
சர்ச்சைக்கு பெயர் போன வனிதாவிற்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் சீசன் 3 இன் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார் வனிதா. அந்த சீசன் இவ்வளவு தூரம் வெற்றி பெற்றதற்கு காரணமாக வனிதா இருந்தார் என்று சொன்னால் அது மிகையில்லை. பல சண்டைகளுக்கு முக்கிய காரணமாக இவர் தான் இருந்தார். கொளுத்திப்போட்டு சண்டையை உருவாக்குவதில் கைதேர்ந்தவராகவும் இருந்தார். இதனால் இவருக்கு வத்திக்குச்சி வனிதா என்றும் பெயர் வந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சில படங்களில் நடித்தும் வருகிறார். மேலும் தொலைக்காட்சி சீரியல்களிலும் அவ்வப்போது தலைக்காட்டி வருகிறார். மூன்றாவது திருமணத்திற்கு பின்னர் எந்த சண்டை சச்சரவிலும் சிக்காமல் இருந்து வருகிறார் வனிதா. அவரது இளைய மகள் அவரது தந்தையுடன் ஹைதராபாத்தில் வசித்து வருவதால், தனது மூத்த மகளுடன் இணைந்து துணிக்கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். அவ்வப்போது பிக்பாஸ் பற்றி சோசியல் மீடியாவில் கருத்துகளையும் கூறி வருகிறார்.

விளம்பரம்

சிக்கன் கறிக்கு பதிலாக காக்கா கறியை கொடுத்ததா பிரபல நிறுவனம்?? வனிதா போட்ட பரபரப்பு ட்வீட்.! 3
கடைசியாக நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் சிக்ஸ்ஸில் வெற்றி பெற்ற அசீமுக்கு ஆதரவாகவும், விக்ரமனுக்கு எதிராகவும் கருத்து கூறி மீண்டும் சர்ச்சையை கிளப்பி வந்தார் வனிதா. வனிதாவை நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வந்தனர். அசீமும் மற்றவர்களை மதிக்காமல் சண்டை போட்டு வந்ததால் இவர்கள் இருவரும் ஒரே குணம் உடையவர்கள் அதனால்தான் இருவரும் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள் என்று நெட்டிசன்கள் வனிதா மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர். இந்த நிலையில் இன்று பிரபல உணவகம் ஒன்றிற்கு சென்ற வனிதா அங்கு சிக்கனை ஆர்டர் செய்திருக்கிறார். அப்போது அந்த சிக்கன் துண்டுகள் மிகவும் சிறியதாக இருந்ததால் கஸ்டமர் சர்வீஸ் மிக மோசமாக இருந்ததாகவும், இது சிக்கன் துண்டுகளா இல்லை காக்கா வா என கேள்வி எழுப்பி இருக்கிறார். இந்த பதிவை பார்த்த சம்பந்தப்பட்ட நிறுவனம் இப்படி ஒரு அனுபவத்தை கொடுத்ததற்காக வருந்துவதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடையவை  சொந்தமாக தோட்டம் அமைக்க நிலம் வாங்கிய ஜிபி முத்து.! அவரே வெளியிட்ட வீடியோ.!

சிக்கன் கறிக்கு பதிலாக காக்கா கறியை கொடுத்ததா பிரபல நிறுவனம்?? வனிதா போட்ட பரபரப்பு ட்வீட்.! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment