Categories: சினிமா

பிரபு தேவா நடிக்கும் 60-வது திரைப்படம்.! Wolf (உல்ஃப்) படத்தின் டீசர் வெளியானது.!

வெளியிட்டது

நடிகர் பிரபுதேவா தற்போது தனது 60ஆவது படமான உல்ஃப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. நடன இயக்குனராக இருந்து நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக நடிகராக உருவெடுத்தவர் நடிகர் பிரபுதேவா. தற்போது 59 படங்களில் நடித்து முடித்திருக்கும் இவர் தனது 60வது படமான உல்ஃப் என்கிற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகி இருக்கிறது. எஸ் ஜே சூர்யாவிடம் உதவி இயக்குனராக இருந்தவர் வினு வெங்கடேஷ். இவர் சிண்டரல்லா என்கிற படத்தை இயக்கியதன் மூலமாக இயக்குனராக அவதாரம் எடுத்தார். தற்போது இரண்டாவது படமே பிரபுதேவாவை வைத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகனாக பிரபுதேவா நடிக்க அவருடன் ராய் லட்சுமி, அனுசுயா பரத்வாஜ், ரமேஷ் திலக், அஞ்சு குரியன் என மிகப் பெரிய பட்டாளமே இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிரபு தேவா நடிக்கும் 60-வது திரைப்படம்.! Wolf (உல்ஃப்) படத்தின் டீசர் வெளியானது.! 1

அறிவியல் புனைவு கதைகளை மையமாக வைத்து பல படங்கள் எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வரிசையில் தற்போது உல்ஃப் என்கிற இந்த படமும் எடுக்கப்பட்டுள்ளது. வரலாற்று காலம் தொடங்கி இன்று வரை நடக்கும் விஷயங்களை அறிவியல் புனை கதையாக விறுவிறுப்பான திரைக்கதையுடன் நகர்த்தி இருக்கிறார் இயக்குனர். ஹீரோ மற்றும் வில்லன் இருவருமே ஓநாயின் குணாதிசயத்தை கொண்டவர்களாக இருக்கின்றனர். இதில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை இந்த படத்தின் கதையாக இருக்கிறது. இந்த படத்திற்கு அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். அம்ரேஷ் கணேஷ் இசையமைத்து இருக்கிறார்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் படத்திலிருந்து டீசரை படக் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர் அந்த டீசர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: T- Series

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்