பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த பூர்ணிமா பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு இன்றைக்கு வெளியேறி இருக்கும் நிலையில் அது குறித்து கேலி செய்யும் விதமாக தற்போது பிரதீப் ஆண்டனி பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அந்த பதிவிற்கு கீழே பலரும் பூர்ணிமாவை தான் குறிப்பிடுகிறீர்கள் என்று கூறிய நிலையில், அதற்கு விளக்கம் கொடுத்து இன்னொரு ட்வீட் ஒன்றையும் போட்டு இருக்கிறார். அதில், “பூர்ணிமா அம்மாவிற்கு கொடுத்த வாக்கிற்காக அமைதியாக இருக்கிறேன். கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் எல்லாம் இஷ்டத்திற்கு பேச வேண்டாம்” என்று அவர் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

பிக் பாஸ் சீசன் 7ல் முக்கியமான போட்டியாளராக இருந்தவர் பிரதீப் ஆண்டனி. இவர் தான் டைட்டில் ஜெயிப்பார் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், வீட்டிலிருந்த மற்ற போட்டியாளர்கள் இவர் மீது குற்றச்சாட்டுகளை கூறினர். இதனால் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டார். வெளியேறிய பின்னர் தீர விசாரிக்காமல் தன்னை வெளியேற்றி விட்டதாக மறைமுகமாக பிக் பாஸை தாக்கி பேசி வருகிறார். அவருடைய ட்விட்டர் பதிவுகள் பிக் பாஸ் குறித்து கிண்டல் அடிக்கும் விதமாக இருந்து வருகிறது.்இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் பூர்ணிமா ரூ.16 லட்ச ரூபாய் பெட்டியுடன் வெளியேறி இருந்தார்.
Pai paiyai ponn kondoar,
Poi poiyai sonnalum,
Mei meiyai pogum adi 🌤️🌻#SingForTheMoment #DreamOn #LessonsForALaterDay #Mood pic.twitter.com/gXtsQqoAy9
— Pradeep Antony (@TheDhaadiBoy) January 4, 2024
இதை பாடல் ஒன்றின் மூலமாக மறைமுகமாக கலாய்த்து இருந்தார் பிரதீப் ஆண்டனி. அதில், “முட்டாப் பயலை எல்லாம் தாண்டவக்கோனே_ காசு முதலாளி ஆக்குதடா தாண்டவகோனே, கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே, பணப்பெட்டி மீது கண் வையடா தாண்டவக்கோனே” என்கிற சிவாஜி கணேசனின் பாடலை பாடி இந்த தருணத்திற்கு ஏற்றப் பாடல் என்று பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த பலரும் பூர்ணிமாவை தான் இப்படி மறைமுகமாக குறிப்பிட்டு இருப்பதாக கூறியிருந்தனர். இன்னும் சிலர் பிரதீப்பை திட்டியும் இருந்தனர். உங்களால் ஜெயித்து விளையாட முடியவில்லை என்ற வேதனையை இவ்வாறு பதிவிடுகிறீர்களா?? என்று அவரை கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் தற்போது பிரதீப் ஆண்டனி மற்றொரு ட்வீட் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதில். “பூர்ணிமாவின் தாயாருக்கு செய்து கொடுத்த வாக்கிற்காக நான் அமைதியாக இருக்கிறேன். கூலிக்கு மாரடிக்கும் கும்பல் எல்லாம் இஷ்டத்துக்கு பேசி வாயைக் கிளறாதீர்கள். நான் எப்பொழுதுமே ஒருவருடைய குணாதிசயத்தை தாழ்த்தி விளையாடும் விளையாடும் நபர் கிடையாது. அது என்னுடைய விளையாட்டும் கிடையாது” என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவிற்க்கு கீழே நீங்கள் பூர்ணிமாவின் தாயாருக்கு அப்படி என்ன வாக்கு கொடுத்தீர்கள்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.