Categories: சினிமா

சிவா நிகழ்ச்சி தொகுப்பாளரா இருந்தப்ப நான் கெஸ்ட் ஆ போய் இருந்தேன்..உணர்ச்சிவசப்பட பிரஜின்

வெளியிட்டது

தனியார் தொலைக்காட்சிகள் அவ்வளவாக இல்லாத காலம் அது. அப்போதுதான் தனியார் தொலைக்காட்சிகள் புது புது சேனல்களை தொடங்கி வித்தியாசமான நிகழ்ச்சிகளை வழங்க தொடங்கியிருந்தனர். அவர்களுக்கு முன்னோடியாக இருந்தது சன் டிவி தான். சன் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் அவ்வளவு பிரபலம். அதை தொகுத்து வழங்குபவர்களும் ஒரு காலத்தில் மிகப் பிரபலமாக இருந்தனர். இன்று பல தொலைக்காட்சிகள் இருப்பதால் யார் எந்த டிவியில் வேலை செய்கிறார்கள் என்பது கூட தெரியாது. ஆனால் அனைவருக்கும் தெரிந்த ஒரு முகமாக இருப்பவர் தொகுப்பாளர் பிரஜின். இவர் நமது பக்கத்து வீட்டுப் பையன் போல இயல்பான பேச்சினால் பல ரசிகர்களை கவர்ந்திருந்தார். இவரின் நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் விதமும் மிகவும் பிடித்த போனதால் இவருக்கென ஒரு ரசிகர் ரசிகைகள் பட்டாளமும் உருவானது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

சிவா நிகழ்ச்சி தொகுப்பாளரா இருந்தப்ப நான் கெஸ்ட் ஆ போய் இருந்தேன்..உணர்ச்சிவசப்பட பிரஜின் 1

நிகழ்ச்சி தொகுப்பாளர் பணியை விட்டுவிட்டு, சின்னத்திரை பக்கம் தலை காட்டத் தொடங்கினார் பிரஜின். இவர் முதலில் விஜய் டிவியில் சீரியலில் நடிகராக நடித்த பின்பு தான் மிகப் பிரபலமானார். காதலிக்க நேரமில்லை என்ற நாடகத்தில் வரும் என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு என்ற பாடல் இன்றளவும் பிரபலம். முன்பெல்லாம் இந்த பாடலை தங்களது ரிங்டோனாக பலரும் வைத்து சுற்றிய காலங்களும் உண்டு. பின்னர் நடன நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்று வந்தார். சிறிது கால இடைவெளிக்கு பின்னர் சின்னத்தம்பி, அன்புடன் குஷி, வைதேகி காத்திருந்தாள் போன்ற பல சீரியல்களின் நடித்தார். இதில் வைதேகி காத்திருந்தாள் சீரியல் எடுத்த வேகத்திலேயே சரியான இயக்குனர் இல்லாமல் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சின்னத்திரையில் இருந்து வெளியேறினார்.

இவர் நடித்திருக்கும் டி3 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். தனியார் சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்த பிரஜின் முதல் ரவுண்டில் சினிமா வாய்ப்பு சரியாக அமையாத காரணத்தினால் தான் சீரியலுக்கு வந்தேன். மீண்டும் இரண்டாவது சுற்றில் சினிமா எனக்கு கைவிடாது என்று தான் நம்புவதாக கூறினார். மேலும் சிவகார்த்திகேயன் என் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும், அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றில் தான் கெஸ்ட் ஆக போயிருந்ததாகவும் பிரஜின் கூறியிருந்தார். மேலும் டிவியில் இருந்து சிவகார்த்திகேயன் சினிமாவில் சாதிச்சிட்டாரே? உங்களால் ஏன் முடியவில்லை என்று பலரும் கேட்கின்றனர், சிவகார்த்திகேயனுக்கான நேரம் வந்துவிட்டது, எனக்கான நேரம் வரும்வரை நான் காத்திருக்கிறேன் என்றும் பிரஜின் உணர்ச்சிவசப்பட்டு கூறினார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

YouTube video code embed credits: Aadhan Media

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்