எவன் வீட்டு காசுல எவன்டா ஜாலியா இருக்குறது? நடிகர் நடிகைகளை கிழித்து தொங்கவிட்ட கே.ராஜன்

தமிழ்நாட்டில் தயாரிப்பாளர் கே.ராஜன் பற்றிய அறிமுகமே தேவையில்லை. இவர் வாயைத் திறந்தாலே பலரையும் வச்சி செய்து விடுவார், குறிப்பாக அதிக சம்பளம் கேட்கும் நடிகர்களையும், நடிகைகளையும் இவர் மேடையிலேயே திட்டி தீர்த்து விடுவார். தற்போது இவர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பெரிய ஹீரோக்கள் கேரவனில் குஜாலாக இருப்பதாக அவர் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது. புதிதாக திரைத்துறைக்கு அறிமுகமாகியுள்ள இயக்குனர் சந்துரு முருகானந்தம் இயக்கியுள்ள படம் தான் நாட் ரீச்சபிள். இந்த படத்தில் சுபா தேவராஜ், சாய் கானியா என்ற இரண்டு புதுமுக ஹீரோயின்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற கே.ராஜன் வழக்கம் போல நடிகர் நடிகைகளை திட்டி தீர்த்து விட்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எவன் வீட்டு காசுல எவன்டா ஜாலியா இருக்குறது? நடிகர் நடிகைகளை கிழித்து தொங்கவிட்ட கே.ராஜன் 1 

விளம்பரம்

அதில் பேசிய அவர் சிறிய படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் தான் சினிமாவை காப்பாற்றி வருவதாகவும், பெரிய படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் யாருமே சினிமாவை காப்பாற்றுவதில்லை, அதே போல தான் பெரிய பெரிய ஹீரோக்களும், அவர்கள் பிழைப்பை மட்டுமே பார்ப்பதாகவும், அதுமட்டுமில்லாமல் படப்பிடிப்பை ஹைதராபாத், மும்பை என நடத்தி தமிழ் சினிமா தொழிலாளர்களின் வேலையை கெடுக்கிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் பேசிய அவர் நான் எல்லா நடிகர் நடிகைகளையும் கேட்கிறேன் ஜாலியாக ஏசி காரில் வருவதும், கேரவனில் ஜாலியாக சீட்டுக்கட்டு விளையாடிவிட்டு, அப்புறம் புஜால் செய்கிறார்கள் என்றும் ஷாட் ரெடியாகிவிட்டது என்று கூப்பிட்டால் கூட வருவதில்லை, போன் செய்து கூப்பிட்டாலும் வருவதில்லை என்று திட்டி தீர்த்து விட்டார்.

தொடர்புடையவை  GOAT கதை இதுதான்..! கதையின் கருவை சொன்ன இயக்குனர் வெங்கட் பிரபு..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

எவன் வீட்டு காசுல எவன்டா ஜாலியா இருக்குறது? நடிகர் நடிகைகளை கிழித்து தொங்கவிட்ட கே.ராஜன் 3

விளம்பரம்

எவன் வீட்டு காசுல கேரவன்ல்ல இப்படி ஜாலியா உக்காந்துகிட்டு அட்டகாசம் பண்றீங்க? ஒரு அரை மணி நேரம் தாமதம் ஆனால் கூட தயாரிப்பாளருக்கு எவ்வளவு செலவு தெரியுமா? கேரவனிலிருந்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவதற்கு பவுன்சர்கள் வேறு வைத்துக் கொள்கிறீர்கள், நீங்கள் என்ன தீவிரவாதியா? அப்படி என்ன தவறு செய்து விட்டீர்கள்? உங்களுக்கு எதுக்கு பாதுகாப்பு? எங்கு போனாலும் பவுன்சர்களை அழைத்துக் கொண்டு செல்கிறீர்கள் அப்படி பாதுகாப்பு கொடுப்பதற்கு நீங்கள் எந்த தவறு என்ன தவறு செய்து விட்டீர்கள்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

எவன் வீட்டு காசுல எவன்டா ஜாலியா இருக்குறது? நடிகர் நடிகைகளை கிழித்து தொங்கவிட்ட கே.ராஜன் 5

விளம்பரம்

50 லட்சம் வாங்கும் ஹீரோவை விட 5 லட்சம் வாங்கும் ஹீரோ நடிக்கும் படங்கள் நன்றாக ஓடுகிறது. மக்கள் தரமான படங்களை பார்ப்பதற்கு தயாராக இருக்கிறார்கள். அதே போல இந்த நாட் ரீச்சபிள் படமும் மக்களிடம் நல்ல ரீச் ஆகும். கதைதானே முக்கியம் தவிர கதாநாயகர்கள் அல்ல என்றும், சிக்கனமாக படங்களை எடுக்கவும் தயாரிப்பாளர் கே ராஜன் அவர்களுக்கு அறிவுரை கூறினார். அவரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டும் பார்க்கட்டும் வருகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment