Categories: சினிமா

விஜய்யுடன் வில்லன் ரோலில் நடிக்கிறாரா பிரசன்னா? ரசிகரின் கேள்விக்கு அவரே சொன்ன பதில்.. இப்படி ஒரு காம்போ கிடைச்சா வேற லெவெல்ல இருக்கும்

வெளியிட்டது

தமிழ் திரையுலகில் உள்ள க்யூட்டான ஜோடிகளில் ஒருவர்தான் சினேகா – பிரசன்னா. பிரசன்னா 2002ம் ஆண்டு வெளியான ஃபைவ் ஸ்டார் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. சீனா தானா, சாது மிரண்டால், அஞ்சாதே, நாணயம், முரண் போன்ற பல படங்களில் நடித்தார் இந்த நிலையில் 2009ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடித்துவந்த போது இவருக்கும் சினேகாவுக்கும் காதல் ஏற்பட்டது. 2012ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அன்று முதல் இன்று வரை க்யூட் ஜோடிகளாக உள்ளனர்.

விஜய்யுடன் வில்லன் ரோலில் நடிக்கிறாரா பிரசன்னா? ரசிகரின் கேள்விக்கு அவரே சொன்ன பதில்.. இப்படி ஒரு காம்போ கிடைச்சா வேற லெவெல்ல இருக்கும் 1

ஹீரோவாக பல படங்களில் நடித்து இருந்தாலும் வில்லன் கதாபாத்திரத்தையும் சிறப்பாக நடிப்பார் பிரசன்னா. அதற்கு எடுத்துக்காட்டாக அஞ்சாதே, திருட்டுப்பயலே 2 போன்ற படங்களை சொல்லலாம். இந்த படங்களில் வில்லனாக வந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார் பிரசன்னா. திருட்டுப் பயலே படத்திலும், ஃபிங்கர் டிப் வெப் சீரிஸிலும் நடிப்பில் பின்னி இருப்பார். மாஃபியா படத்திலும் வில்லனாக நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருந்தார். இதனால் பிரசன்னா முண்ணனி நடிகர்களான அஜீத், விஜய் போன்றவர்களுடன் வில்லனாக நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்பட்டனர்.

வலிமை படம் வெளியான போதே கார்த்திகேயாவுக்கு பதிலாக பிரசன்னா இந்த ரோலில் நடித்திருந்தால் படம் பெரிய வெற்றி அடைந்திருக்கும் என்று பேசப்பட்டது. இந்த நிலையில் அவரின் ரசிகர் ஒருவர் போட்ட ட்வீட்க்கு அவர் பதிலளித்துள்ளார். அதில் ஃபிங்கர் டிப் வெப் சீரிஸில் பிரசன்னாவின் நடிப்பை பார்த்துவிட்டு ரசிகர் ஒருவர், உங்க ஆக்டிங் வேற வெலவல் அண்ணா, நீங்க விஜய்க்கு வில்லனாக சீக்கிரம் நடிக்கனும் என்று பதிவிட்டு இருந்தார். அதை ஷேர் செய்த பிரசன்னா நானும் அதை விரும்புகிறேன் என்று்பதிலளித்து இருந்தார்.

ஃபிங்கர்டிப் வெப்சீரிஸ் மூலம் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி இருக்கிறார் பிரசன்னா. ஏற்கனவே துப்பறிவாளன் படத்திலும் மிரட்டி இருந்தார். இதன் 2ம் பாகத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் ரசிகர் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக முண்ணனி நடிகர்களுடன் வில்லனாக இணைவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். முண்ணனி நடிகர்கள் நடிக்கும் படங்களில் தமிழ் மொழி தெரியாதவர்களை வில்லனாக போட்டு படம் எடுப்பதை தற்போது இயக்குனர்கள் ஒரு டெம்ப்ளேட் ஆக வைத்து இருக்கின்றனர். அதில் பல படங்கள் ஓடாமல் மொக்கை ஆகி விடுகின்றன. அவர்களுக்கு பதிலாக தமிழ் தெரிந்த பிரசன்னா போன்ற நல்ல வில்லன்களை இயக்குனர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்