தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக வந்தாலும், இன்று தனக்கென மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர் நடிகர் சூர்யா. சிவகுமாரின் மகனான இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான “நேருக்கு நேர்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் சில காலம் வெற்றிக்காக காத்திருந்த இவருக்கு பாலாவின் “நந்தா” படம் மிக பெரிய அளவில் காய் கொடுத்தது. அதற்கு முன் சில காமெடி , காதல் படங்கள் நடித்து இருந்தாலும் மக்கள் இவரை நந்தா படத்தின் மூலம் தான் ஒரு தனி நாயகனாக ஏற்று கொண்டனர். பின்னர் ஆறு, வேல், கஜினி, வாரணம் ஆயிரம், காக்க காக்க, ஜில்லுனு ஒரு காதல், சிங்கம் என வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இதனை அடுத்து எடுக்கப்பட்ட “ஜெய் பீம்” படம். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சந்துரு என்ற ஒரு வழக்கறிஞரின் வழகியை அடிப்படையாக கொண்டு உருவான இந்த படம் வரவேற்பையும், சர்ச்சைகளையும் சேர்ந்தே பெற்றது. மிக பெரிய அளவில் மக்களால் கொண்டாடப்பட்ட இந்த படம், அரசியல் சர்ச்சைகள் பலவற்றை பெற்ற போதிலும், படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படமும் ஆஸ்கார் நாமினேஷனுக்கு இந்திய சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது.

கடைசியில் தேர்வாகாமல் போனாலும் படத்தை பார்த்த நடுவர்கள் கூட படத்தை பாராட்டி வாழ்த்துக்களை வெளியிட்டனர். இது சூரியாவிற்கும், படக்குழுவிற்கும் மிக பெரிய மரியாதையை கொடுத்தது. இந்த ஆண்டு நடைபெறவுள்ள “95வது ஆஸ்கார் விருதுகள்” அமைப்பின் சார்பில் ஆஸ்கார் அமைப்பின் உறுப்பினராக, அந்த அமைப்பு சார்பில் சூர்யாவுக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி இப்பொது வெளியாகி மிக பெரிய அளவில் பகிரப்படுவதுடன் நடிகர் சூர்யாவிற்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. இந்த பட்டியலில் மற்றொரு இந்திய நடிகை கஜோலும் உள்ளார்.

இது குறித்து நேற்று பாராட்டி பேசியுள்ள தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் ட்விட்டர் தளத்தில், “தேர்ந்த நடிப்பாலும், சிறப்பான திரைப்படங்கலாலும், முதல் தென்னிந்திய நடிகராக ஆஸ்கார் தேர்வுக்குழு நபராக அங்கீகரிப்பட சூரியா அவர்களுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். கூடவே “வானமே எல்லை” எனவும் பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள சூரியா, “வாழ்த்துக்கள் பொறுப்புணர்ச்சியை கொடுக்கிறது.நல்ல படைப்புகளை கொடுக்க முயற்சிக்கிறேன்” என பதிலளித்துள்ளார். ஆஸ்கார் விருது குழுவில் நடிகர் சூர்யாவுடன் பங்கேற்க இந்திய நடிகை கஜோலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதல் தென்னிந்திய நடிகராக சூரியா பங்கேற்கவுள்ளது அவருக்கு மட்டுமின்றி தமிழகத்திற்கும் மிக பெரிய பெருமையே. நடிகர் கமலும் சூர்யாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
