நடிகர் பிரபுதேவா தற்போது முதல் முறையாக தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது. சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளை காண வந்த பிரபுதேவா தற்போது தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் பிரபுதேவாவிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா.? என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ் திரையுலகின் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரபுதேவா. இவர் நடன இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், திரைப்பட இயக்குனர் என்று பன்முக திறமையாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். 1994 ஆம் ஆண்டு வெளியான இந்து என்கிற படத்தில் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் பிரபுதேவா. அதன் பின்னர் இவர் மிஸ்டர் ரோமியோ, லவ் பேர்ட்ஸ், மின்சார கனவு, காதலா காதலா ஏழையின் சிரிப்பில், பெண்ணின் மனதை தொட்டு போன்ற பல நல்ல படங்களில் நடித்திருக்கிறார்.

பல படங்களுக்கு நடன இயக்குனராக இருந்த அவர் பாடலாசிரியராகவும் பாடகராகவும் இருந்திருக்கிறார். மேலும் ஒரு சில படங்களை அவர் தயாரித்தும் இருக்கிறார். விஜய் வைத்து போக்கிரி, வில்லு போன்ற படங்களை இயக்கியும் இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் பஹீரா. இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை. தற்போது ப்ளாஷ்பேக் என்கிற ஒரு தமிழ் படத்திற்கு கதை எழுதி வருகிறார்.

கைவசம் எந்த புது படத்திலும் கமிட்டாகாமல் இருந்து வருகிறார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பழமொழிகளில் பணியாற்றி இருக்கிறார். தற்போது அதிகமாக ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் பிரபுதேவா. இந்த நிலையில் பிரபுதேவா தனது மகன் உடன் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி இருக்கிறது. அப்படியே பிரபுதேவாவை உரித்து வைத்திருக்கிறார் அவரது மகன்.

பிரபுதேவாவும் நயன்தாராவும் சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் அவரது மூத்த மனைவியுடன் விவாகரத்து பெறுவதாக சர்ச்சை எழுந்தது. ஆனால் அவர் தனது அதன் பின்னர் சர்ச்சைகள் எல்லாம் ஓய்ந்து மும்பையில் தனியாக வாழ்ந்து வருகிறார் பிரபுதேவா. இவரின் மூத்த மனைவிக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். அதில் முதல் குழந்தை இறந்துவிட்ட நிலையில் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் சென்னையில் தற்போது ஐபிஎல் போட்டிகள் நடந்து வரும் நிலையில் அந்த போட்டிகளை பார்ப்பதற்காக தனது மகனுடன் பிரபுதேவா வந்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி இருக்கிறது. பார்ப்பதற்கு அப்படியே பிரபுதேவா போலவே இருக்கிறார் அவரது மகன் என்று சொல்லி பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.